எத்தனை படங்கள் தான் கைவசம் உள்ளது!?.. நீளும் நயனின் படவரிசை
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் நடித்துள்ளார். அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நெற்றிக்கண் படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார் மேலும் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நிறைவு பெற்றது
2011ம் ஆண்டு வெளியான "ப்ளைண்ட்" என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கே நெற்றிக்கண் திரைப்படமாகும். நெற்றிக்கண் கூடிய விரைவில் ரிலீஸ் ஆக காத்துள்ளது. இந்த படத்தின் டீசர், பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இது மட்டுமன்றி நயன்தாரா 6 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் முன்னர் வெளியாகின. ஆனால் எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராததால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Recommended Video

இரண்டு திரைப்படங்கள்
இரண்டு படங்கள் ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனத்துக்கு நயன்தாரா நடித்து கொடுக்க ஒப்பந்தம் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழில் ஒரு படம் நிவின் பாலி உடன் இணைந்து நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. எந்த தகவலும் இன்னும் உறுதியாகவில்லை.

சினிமா வட்டாரங்கள்
இந்நிலையில் தெனாலி ராமன், எலி படங்களின் இயக்குனர் யுவராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











