நயன்தாராவின் அடுத்த படம் யாருடன்... மாஸாக வெளியான கலக்கல் தகவல்

சென்னை : கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் தான் நடிக்கும் கேரக்டர்கள், படங்கள் ஆகியன தனக்கு கச்சிதமாக பொருந்தும் வண்ணம் தேர்வு செய்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அய்யா படத்தின் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்த நயன்தாரா, தற்போது தனது திறமையான நடிப்பால் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டுள்ளார். தமிழில் கடைசியாக மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நடித்தார்.

வரிசைகட்டும் படங்கள்

வரிசைகட்டும் படங்கள்

தற்போது கையில் பல படங்களை வரிசையாக வைத்துள்ளார் நயன்தாரா. நெற்றிக்கண், ரஜினி நடிக்கும் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நட்சத்திர பட்டாத்துடன் நயன்தாரா

நட்சத்திர பட்டாத்துடன் நயன்தாரா

அண்ணாத்த படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து வரும் நயன்தாரா, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோருடன் இணைந்து நடித்து வருகிறார்.

அடுத்த 2 படங்கள் லீக்கானது

அடுத்த 2 படங்கள் லீக்கானது

இந்நிலையில் நயன்தாராவிற்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலின்படி, புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் 2 படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளாராம். இதில் முதல் படம் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளதாம்.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

ஏற்கனவே நயன்தாரா நடித்து வரும் அனைத்து படங்களும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது புதிதாக ஒப்பந்தமாகி உள்ள படங்களும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளன. இதற்கிடையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வெளியிடும் ஃபோட்டோக்களால் மீடியாக்களின் கவனம் அவர்கள் மீதே உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X