நயனதாராவைக் 'கடலுக்கு' கூப்பிட்ட மணிரத்தினம்!

By Siva

மணிரத்னம் தனது கடல் படத்தில் நடிக்க வருமாறு நயன்தாராவை கேட்டுக் கொண்டுள்ளார்.

மணிரத்னம் கார்த்திக் மகன் கௌதம் மற்றும் ராதாவின் இளைய மகள் துளசியை வைத்து கடல் என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் முதலில் சமந்தா தான் ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால் அவர் திடீர் என்று விலகியதால் தற்போது துளசி நடிக்கிறார். இதில் விசேஷம் என்னவென்றால் அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்குடன் தான் ராதா அறிமுகமானார்.

தற்போது கார்த்திக் மகனுடன், ராதாவின் இளைய மகள் அறிமுகமாகிறார். மீனவ கிராமங்களில் எடுக்கப்பட்டு வரும் கடல் படத்தில் சில முக்கிய காட்சிகளில் நடிக்க வருமாறு இயக்குனர் மணிரத்னம் நயன்தாராவைக் கேட்டுக் கொண்டுள்ளார். மணி கேட்டு யாராவது இல்லை என்று சொல்வார்களா. நயனும் ஓ.கே. சொல்லிவி்ட்டார். நயன் தற்போது அஜீத் படத்தில் பிசியாக இருக்கிறார்.

இருப்பினும் கடல் படத்திற்கு நிச்சயம் நேரம் ஒதுக்கித் தருவதாக வாக்களித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X