காதலர் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்...வைரலாகும் ஃபோட்டோஸ்

சென்னை : கோலிவுட்டில் பிரபலமான ஸ்டார் காதல் ஜோடி நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் தான். இவர்களிடம் திருமணம் எப்போது என கேட்காதவர்கள் இல்லை. இருந்தாலும் தொடர்ந்து இந்த ஜோடி மவுனம் காத்து வருகிறது.

சமீபத்தில் சோஷியல் மீடியா பக்கத்தில் கையில் மோதிரத்துடன் இருக்கும் ஃபோட்டோவை நயன்தாரா பகிர்ந்தார். இதனால் சோஷியல் மீடியாவே பரபரப்பாகி இவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டதா, நிச்சயதார்த்த மோதிரமா என கேட்கத் துவங்கி விட்டனர். டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதும் நயன்தாராவிடம் இதே கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இது எங்களின் நிச்சயதார்த்த மோதிரம் என்ற ரகசியத்தை உடைத்தார் நயன்தாரா.

பிரபல காதல் ஜோடி

பிரபல காதல் ஜோடி

விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதன் பிறகு இவர்கள் ஜோடியாக வெளியில் சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒன்றாக அடிக்கடி வெளிநாடுகளுக்கு டூர் செல்லும் இந்த ஜோடி, அங்கு எடுக்கும் ஃபோட்டோக்கள், செல்ஃபிக்களை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் பிறந்தநாள்

விக்னேஷ் சிவன் பிறந்தநாள்

இந்நிலையில் இன்று விக்னேஷ் சிவன் தனது 35 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ஏராளமானோர் அவருக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் காதலியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனது காதலருக்கு என்ன கிஃப்ட் தர போகிறார் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்

Recommended Video

NAYAN -யை பார்க்க திரண்ட கூட்டம் | kathuvakkula Rendu Kadhal, Vijaysethupathi
நயன்தாரா கொடுத்த கிஃப்ட்

நயன்தாரா கொடுத்த கிஃப்ட்

இந்நிலையில் நயன்தாரா கொடுத்த கிஃப்ட், விதவிதமான கேக்குகள் வைத்த ஃபோட்டோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவனை கட்டி அணைத்து, நயன்தாரா வாழ்த்து சொல்லும் இந்த ஃபோட்டோக்கள் படு வைரலாகி வருகின்றன. இந்த ஃபோட்டோக்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்த ஒரு மணி நேரத்திலேயே ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்து, கமெண்ட் செய்துள்ளனர்.

தேங்க் யூ தங்கமே

தேங்க் யூ தங்கமே

இந்த ஃபோட்டோக்களுடன் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள கேப்ஷனில், இந்த அழகிய சர்ப்ரைஸ் பிறந்தநாளை தந்ததற்கு நன்றி தங்கமே. நீ என் வாழ்க்கையில் இருப்பது ஈடு செய்ய முடியாத கிஃப்ட். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இன்று Two Two Two பாடல் வெளியிடப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் எப்போ

திருமணம் எப்போ

ரொமான்டிக்கான இந்த காதல் ஜோடியின் ஃபோட்டோக்களை பார்த்து விட்டு, எப்போது திருமணம் என பலரும் கேட்டு கமெண்ட் செய்துள்ளனர். விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

செகண்ட் சிங்கிள் ரிலீஸ்

செகண்ட் சிங்கிள் ரிலீஸ்

விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை முன்னிட்டு, இவர் சமீபத்தில் இயக்கி முடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் செகண்ட் பாடலான Two Two Two இன்று வெளியிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X