என் அண்ணனே.. கருப்பு ஆர்.ஜே.பாலாஜி மீது நயன்தாரவுக்கு இவ்வளவு பாசமா?.. பாசமலரே தோத்துடும் போல
சென்னை: சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கும் கருப்பு திரைப்படம் நேற்று முன்தினம் பல பிரச்னைகளை தாண்டி ரிலீஸானது. ரசிகர்க்ளும் படத்துக்கு பெரிய ரெஸ்பான்ஸை கொடுத்திருக்கிறார்கள். ரோகிணி திரையரங்கில் முதல் நாள் கிடைத்த வரவேற்பை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு கத்தினார் பாலாஜி. அவரை அருகில் இருந்தவர்கள் தேற்றினார்கள். இந்நிலையில் நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சூர்யா - ஆர்.ஜே.பாலாஜி கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் கருப்பு. திரிஷா ஹீரோயினாக நடித்திருக்கிறார். முதன்முறையாக இவர்கள் சேர்ந்திருப்பதால் இப்படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு இருந்தது. அதிலும் சூர்யாவின் ரசிகர்கள் இப்படத்தை ரொம்பவே எதிர்பார்த்தார்கள். ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே சூர்யாவுக்கு தரமான வெற்றி கிடைக்கவே இல்லை. அவர் எப்படி நடித்தாலும் அந்த ஹிட் மட்டும் அவரிடம் வரமாட்டேன் என அடம் பிடித்தது.

படம் சூப்பர் வெற்றி: இப்போது அந்த வெற்றி சூர்யா வசம் வந்திருக்கிறது. பக்கா கமர்ஷியல் படமாக உருவாக்கியிருந்த பாலாஜியை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். சூர்யாவுக்கு தரமான கம்பேக் கொடுத்த பாலாஜி மீண்டும் அவரை வைத்து படம் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை வைத்துவருகிறார்கள். படம் ரிலீஸாகி இரண்டு நாட்கள் முடிவடைந்திருக்கின்றன. இரண்டு நாட்களில் கருப்பு திரைப்படம் மொத்தம் உலகளவில் 66 கோடி ரூபாயை அள்ளியிருப்பதாகவும் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.
எமோஷனலான ஆர்.ஜே.பாலாஜி: முதலில் இப்படம் மே 14ஆம் தேதிதான் வெளியாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் ஒரு நாள் தாமதமாக மே 15ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ஆர்.ஜே.பாலாஜி, திரிஷா, கார்த்தி, சாய் அபயங்கர் உள்ளிட்டோர் ரோகிணி தியேட்டரில் சென்று பார்த்தார்கள். தியேட்டருக்குள் செல்லும்போதே பாலாஜிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை கொடுத்தார்கள். படம் முடிந்த பிறகு ஒட்டுமொத்த ரசிகர்களும் பாலாஜியை கொண்டாடி தீர்த்துவிட்டார்கள்.
நயனின் போஸ்ட்: இதை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட பாலாஜி; தியேட்டர் பால்கனியில் நின்று கத்தி தீர்த்துவிட்டார். ஆனந்த கண்ணீரும் வடித்தார். அதை பார்த்த சாய் அபயங்கர், திரிஷா, கார்த்தி உள்ளிட்டோர் எல்லாம் அவரை கட்டியணைத்து தேற்றினார்கள். இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். அதாவது பாலாஜி உணர்ச்சிவசப்பட்டு கத்திய புகைப்படத்தை பகிர்ந்து, "என் அண்ணனே உனக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும் என" கூறியிருந்தார்.
வெற்றி கூட்டணி: அதற்கு ஆர்.ஜே.பாலாஜி லவ் யூ சிஸ்டர் என நன்றி தெரிவித்திருந்தார். முன்னதாக நயன்தாராவை வைத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தையும் பாலாஜியே இயக்குவார் என்றுதான் கருதப்பட்டது. ஆனால் சுந்தர்.சி இயக்குகிறார். பொதுவாக தன் படங்கள் தொடர்பான செய்திகளையே பெரிதாக தன் சோஷியல் மீடியா அக்கவுண்ட்டில் பகிராத நயன்; பாலாஜியை பாராட்டி பகிர்ந்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
