வயசாகுது, கவர்ச்சி குறைகிறது..அதிக சம்பளம் கேட்கிறார்..நயன்தாராவை விட்டு விலகி ஓடும் தயாரிப்பாளர்கள்
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி வருவதால் அவருக்கு படவாய்ப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா, ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நடிகை என பெயர் எடுத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.

நயன்தாரா
நயன்தாரா தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள திரையுலகிலும் பல வருடங்களாக கொடி கட்டி பறக்கிறார். அவரது இடத்தை வேறு எந்த நடிகையாலும் இதுவரை நெருங்க முடியவில்லை. நயன்தாரா தனித்தும், பிற கதாநாயகர்களுடன் இணைந்தும் நடித்துள்ள படங்கள் வசூலிலும் சக்கை போடு போடுகின்றன. இதனால், நயன்தாராவின் மார்க்கெட் படத்துக்கு படம் உயர்ந்து வருகிறது.

சம்பளம் ரூ.10 கோடி
ஓரிரு வருடங்களுக்கு முன்பு வரை அவரது சம்பளம் அதிகபட்சம் ரூ.3 கோடி என்று இருந்தது. பின்னர் அது ரூ.5 கோடியாக உயர்ந்தது. ஆனால், தற்போது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்திவிட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி சக நடிகைகளை ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஜெயம்ரவியுடன் நடிக்க இருக்கும் படத்திற்கு 20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து சம்பளத்தை 10 கோடியாக உயர்த்தி உள்ளாராம்.

கவர்ச்சி காட்டுவது இல்லை
அட்லி இயக்கும் ஷாருக்கான் படத்திலும் நடிக்கிறேன். இதனால், என்னை படத்தில் ஒப்பந்தம் செய்தால் உங்களே பிசினஸ்தான் அதிகரிக்கும் என்று தயாரிப்பாளர்களிடம் பேசுகிறாராம் நயன்தாரா, இதனால் தயாரிப்பாளர்கள் 10 கோடி என்பது எல்லாம் மிகவும் அதிகம் என்றும் கூறி அவரை ஒப்பந்தம் செய்வதை தவிர்த்து வருகிறார்களாம். அதுவும் இல்லாமல் முன்பே போல அவர் படங்களில் அவ்வளவாக கவர்ச்சி காட்டுவது இல்லை, ஹீரோக்களும் அவரை சிபாரிசு செய்வதில், மேலும், அவருக்கு வயதாகிவிட்டதால் வேறு நடிகை ஒப்பந்தம் செய்யும் முடிவுக்கு தயாரிப்பாளர் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
Recommended Video

கட்டாயத்தில் நயன்தாரா
இப்படியே நயன்தாரா சம்பளத்தை உயர்த்திக்கொண்டே போனால் நிச்சயம் அவருக்கு படவாய்ப்புகள் குறித்துவிடும். இதனால், சம்பளத்தை அதிரடியாக குறைக்க வேண்டிய கட்டாயத்தில் நயன்தாரா இருப்பதாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா,சமந்தா, விஜய்சேதுபதி நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் 28ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











