விளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

By Siva

Recommended Video

விளம்பர உலகை ஆளும் நயன்தாரா - சமந்தா சம்பள விவரம்- வீடியோ

சென்னை: விளம்பர படங்களில் நடிக்க நயன்தாரா, சமந்தா ஆகியோர் வாங்கும் சம்பளம் பற்றி தெரிய வந்துள்ளது.

நயன்தாரா கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக உள்ளார். சமந்தா தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளிலுமே பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

நயன்தாராவும் சரி, சமந்தாவும் சரி படங்கள் தவிர்த்து விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்கள்.

நயன்தாரா

நயன்தாரா

கை நிறைய படங்கள் வைத்திருக்கும் நயன்தாரா குறிப்பிட்ட விளம்பர படங்களில் மட்டுமே நடிக்கிறார். அப்படி ஒரு விளம்பர படத்தில் நடிக்க அவர் ரூ. 3 கோடி சம்பளம் கேட்கிறார். ஒரு படத்தில் நடிக்க அவர் ரூ. 5 கோடி வாங்குகிறார். அவரின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் அவர் கேட்கும் தொகையை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.

விளம்பரம்

விளம்பரம்

தமிழ், தெலுங்கு திரையுலகில் படுபிசியாக இருக்கும் சமந்தா விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். ஒரு விளம்பர படத்தில் நடிக்க அவர் ரூ. 2 கோடி வாங்குகிறார். திருமணமானாலும் மார்க்கெட் பாதிக்காது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார் சமந்தா. அவரை பார்த்து பிற நடிகைகளுக்கு நம்பிக்கை வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோடி

ஜோடி

திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் சேர்ந்து தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்தில் சமந்தாவும், நாக சைதன்யாவும் சண்டக்கோழியாக எப்பொழுது பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்களாம். படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிப்ரவரி

பிப்ரவரி

நயன்தாரா தனது நடிப்பில் வெளியாகி ஹிட்டான அறம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தயாராகி வருகிறார். கோபி நயினார் இயக்கும் அறம் 2 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது. இரண்டாம் பாகத்தில் நயன்தாரா அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்கிறார் கோபி நயினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X