நயன்தாராவுடன் நடிக்கிறார்.. மீண்டும் இணையும் நானும் ரவுடிதான் டீமில் இந்த ஹீரோயினும் இருக்காராமே

By

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நயன்தாராவுடன் இன்னொரு ஹீரோயினும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், அடுத்து இயக்கிய படம், நானும் ரவுடிதான்.

இதில், விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, ஆர்.ஜே.பாலாஜி, மன்சூர் அலிகான் உட்பட பலர் நடித்திருந்தனர்.

நயன்தாரா காதல்

நயன்தாரா காதல்

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம், 2015 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. இதன் ஷூட்டிங்கில்தான் நயன் தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஒன்றாக சினிமா விழாக்களுக்குச் சென்று வரத் தொடங்கினர். முதலில் நம்ப மறுத்த ரசிகர்கள், பின்னர் அவர்கள் ஒன்றாக செல்வதைப் பார்த்து நம்பினர்.

தானா சேர்ந்த கூட்டம்

தானா சேர்ந்த கூட்டம்

இவர்கள் திருமணம் செய்துவிட்டனர் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், விக்னேஷ் சிவன், நானும் ரவுடிதான் படத்துக்குப் பிறகு, சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். கார்த்திக், கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், நந்தா, கலையரசன் உட்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இது எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மெகா பட்ஜெட் படத்தை இயக்க இருந்தார் விக்னேஷ். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பதாக இருந்தது. பட்ஜெட் அதிகமானதால் அந்தப் படத்தை தயாரிக்க, மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வேறு கதையை விக்னேஷ் சிவன் தயார் செய்துள்ளார். அதில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இதன் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக, நயன்தாரா நடிக்க இருக்கிறார். நானும் ரவுடிதான் டீம் அப்படியே இன்னொரு படத்தில் இணைவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

காத்து வாக்குல ரெண்டு காதல்

காத்து வாக்குல ரெண்டு காதல்

அவர் சமந்தா. நயன்தாராவுடன் சமந்தா இணைந்து நடிப்பது இதுதான் முதல் முறை. இந்தப் படத்துக்கு காத்து வாக்குல ரெண்டு காதல் என்று டைட்டில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. நானும் ரவுடிதான் படத்துக்குப் பிறகு இதைதான் விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X