நகைக் கடை, ஜவுளிக் கடை திறப்பா... அய்யோ ஆளை விடுங்க சாமி! - நயன்தாரா

By Shankar

சென்னை: நகைக் கடை விளம்பரம் என்று கூறி அழைத்துப் போய் நேரத்தை வீணடிக்கிறார்கள், எரிச்சலூட்டும்படி நடந்து கொள்கிறார்கள். எனவே இனி நகைக்கடை விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்றார் நயன்தாரா.

சினிமாவை விட விளம்பர படங்கள் மூலம் கணிசமாய் சம்பாதிக்கிறார்கள் நடிகைகள். குறிப்பாக நயன்தாரா போன்ற நடிகைகளுக்கு கோடிகளில் சம்பளம் தர விளம்பரதாரர்கள் தயாராக உள்ளனர். கடைத் திறப்பு விழாக்களுக்கும் இதே மாதிரி பணம் தருகிறார்கள்.

Nayanthara says no to shop opening events

நயன்தாராவும் பல விளம்பரங்களில் முதலில் நடித்தார். இப்போது விளம்பரமும் வேண்டாம், திறப்பு விழாவும் வேண்டாம் என்கிறார்.

காரணம் என்ன?

கடை விளம்பரங்களில் கலந்து கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. கடை திறப்பு நிகழ்ச்சிகளுக்கு அழைத்து நிறைய நேரம் உட்கார வைக்கிறார்கள். நம்மை வைத்து கொண்டே பூஜை நடத்துகின்றனர். பிறகு போட்டோ எடுக்கிறார்கள்.

nayan

நான்கு, ஐந்து தடவை வெவ்வேறு சேலைகளை மாற்றி மாற்றி உடுத்த வைத்து படம் எடுக்கிறார்கள். அந்த படங்களை வைத்து விளம்பர பலகைகள் தயார் செய்து ஹோர்டிங் வைக்கிறார்கள். ஒரு வருடம் அந்த ஹோர்டிங்குகள் அப்படியே இருக்கும். இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவேதான் கடை விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்கிறேன். விளம்பரப் படங்களைக் கூட ஏற்பதில்லை. ஓய்வு நேரத்தை என் வீட்டில் நிம்மதியாகக் கழிக்கிறேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X