»   »  டர்ட்டி பிக்சர் ரீமேக்கில் நடிக்க இஷ்டமில்லை- நயனதாரா

டர்ட்டி பிக்சர் ரீமேக்கில் நடிக்க இஷ்டமில்லை- நயனதாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil
இந்தியில் சூப்பர் ஹிட்டான தி டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிக்க விருப்பமில்லை என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தி படமான தி டர்ட்டி பிக்சர் சக்கைப் போடு போட்டது. அதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் கவர்ச்சிகரமாக நடித்த வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழில் தி டர்ட்டி பிக்சரை ரீமேக் செய்வது என்று முடிவு செய்தனர்.

தமிழில் அனுஷ்கா சில்க் வேடத்தில் நடிக்கிறார். ஆனால் அவரை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு நயன்தாராவைத் தான் சில்க் வேடத்தில் நடிக்க கேட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து நயன்தாராவிடமே கேட்டதற்கு, சில்க் வேடத்தில் நடிக்க என்னை யாரும் அனுகவில்லை என்றார். அந்த படத்தில் நடிக்க உங்களுக்கு ஆர்வமுள்ளதா என்றதற்கு, அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமில்லை என்று பொசுக்கென்று கூறிவிட்டார்.

தி டர்ட்டி பிக்சர் வித்யா பாலனை புகழின் உச்சிக்கே கொண்டு போய் அமரவைத்துள்ளதால் தமிழ் ரீமேக்கில் நடிக்க பல நடிகைகள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் நயன் உல்ட்டாவாக பதில் சொல்லியிருக்கிறார்.

அது சரி, சீதை வேடத்தில் நடித்தவரைப் போய் சில்க வேடத்தில் நடிக்கக் கூப்பிட்டால் எப்படி...

English summary
Rumours are there that Nayanthara was approached to do Silk Smitha's role in the tamil remake of The dirty picture. But Nayan has not only denied this rumour but also seemed uninterested in the role.
Please Wait while comments are loading...