இந்த தனுஷுக்காக ஆடிக் குடுத்தா இப்படி ஆயிடுச்சே: கடுப்பில் நயன்
சென்னை: எதிர்நீச்சல் படத்தில் காதல் தோல்வி பாட்டில் ஆடிய நயன்தாராவைத் தேடி பல காதல் தோல்வி பாட்டு வாய்ப்புகள் வருகிறதாம்.
தனுஷ் தயாரிப்பில் சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்த் நடித்துள்ள எதிர் நீச்சல் படம் இன்று ரிலீஸானது. இந்த படத்தில் காதல் தோல்வி பாடல் ஒன்று உள்ளது. இந்த பாட்டுக்கு தனுஷுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார் நயன்தாரா.
நயன்தாரா காதலில் தோல்வி அடைந்தவர் என்பதால் தான் இந்த பாட்டுக்கு தேர்வு செய்துள்ளனர்.

குவியும் காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள்
எதிர்நீச்சல் பாடலைப் பார்த்த பலர் அடடா நம்ம படத்திலும் காதல் தோல்வி பாட்டுக்கு நயன்தாராவை ஆட வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து அவரிடம் கேட்டுள்ளனர்.

கடுப்பில் நயன்
நண்பனுக்காக குத்தாட்டம் போட்டால் இப்படி ஆளாளுக்கு நம்மை காதல் தோல்வி பாட்டுக்கு ஆடச் சொல்கிறார்களே என்று நயன்தாரா கடுப்பில் உள்ளாராம்.

இப்படி ஆயிடுச்சே?
ஒரு குத்துப்பாட்டு ஆடியது நம் இமேஜை இப்படி ஆக்கிவிட்டதே என்று நயன் நொந்து கொண்டிருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











