விஜய் செல்ஃபி ஒரு பக்கம் தீயாய் பரவுது.. இன்னொரு பக்கம் நயன்தாரா எடுத்த செல்ஃபியை பார்த்தீங்களா!

சென்னை: கடந்த ஆண்டு நயன்தாரா ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்திருந்தார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் படத்திலும் அதன் பின்னர் டிசம்பர் மாதம் அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். இந்த ஆண்டு டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சினிமாவை தாண்டி பிசினஸிலும் கால் தடத்தை பதித்துள்ள நயன்தாரா நேற்று Femi9 சக்சஸ் மீட் நிகழ்ச்சியை சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடத்தியிருந்தார்.

பச்சை நிற சேலையை அணிந்துக் கொண்டு நயன்தாரா க்யூட் கிளாமர் லுக்கில் வந்து ரசிகர்களை கவர்ந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தற்போது நயன்தாராவின் கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Nayanthara selfie goes trending in social media

நயன்தாராவுக்கு கடும் எதிர்ப்பு: ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரபலமான நயன்தாரா நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அன்னபூரணி வெளியான நிலையில், அந்த படத்தில் இந்து மக்களுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக வட இந்தியர்கள் பெரும் பஞ்சாயத்தை கிளப்பி உள்ளனர். #Annapoorani ஹாஷ்டேக்கை பதிவிட்டு நெட்பிளிக்ஸில் இருந்து படத்தை தூக்கினாலும் நயன்தாரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரை சும்மா விடக் கூடாது என இந்து அமைப்பினர் இனிமேல் அவர் நடிக்கும் படங்களை எல்லாம் புறக்கணிக்க வேண்டும் என கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Nayanthara selfie goes trending in social media

விஜய் செல்ஃபி: மீசை இல்லாமல் க்ளீன் ஷேவ் லுக்கில் நடிகர் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சென்னை ஷூட்டிங்கின் போது ரசிகர்களை சந்தித்து செல்ஃபி எடுத்துக் கொண்டது வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது. தி கோட் படத்துக்காக அநியாயத்துக்கு உடல் எடையை எல்லாம் குறைத்து நடித்து வருகிறார் விஜய். இந்நிலையில், நயன்தாராவின் செல்ஃபி புகைப்படத்தை தற்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா செல்ஃபி: சேலத்தில் நேற்று நடைபெற்ற Femi9 சானிட்டரி நாப்கின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நீயா நானா கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் சானிட்டரி நாப்கின் முக்கியத்துவத்தை பற்றி நயன்தாரா பேசினார். அதன் பின்னர் அதற்காக உழைத்தவர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

Nayanthara selfie goes trending in social media

சந்தோஷமும் சோகமும்: ஒரு பக்கம் ஒரு கோடி சானிட்டரி நாப்கின் விற்பனை செய்யப்பட்ட சாதனையில் தொழிலதிபராக நயன்தாரா சந்தோஷப்பட்டு வரும் நிலையில், இன்னொரு பக்கம் அன்னபூரணி படம் நயன்தாராவுக்கு வசூலில் பலத்த அடி கொடுத்த நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸும் முடங்கிப் போனதால் கடும் அப்செட் ஆகி உள்ளார் என்கின்றனர்.

நிலேஷ் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா?: அட்லீ போல நயன்தாராவை வைத்து ஹிட் இயக்குநராக மாறிவிடலாம் என நினைத்து சர்ச்சை கருத்துடன் படத்தை இயக்கிய இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா நயன்தாராவின் பெயரையும் சேர்த்து டேமேஜ் செய்து விட்டார் என்றும் இதற்கு மேல் அவருக்கு புதிய பட வாய்ப்புகளை கிடைப்பது ரொம்பவே கஷ்டம் தான் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டூடியோஸும் இயக்குநர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X