கண்டு புடிச்சிட்டேன்.. வானவில்லை முதன்முறையாக பார்த்து ரசித்த மகன்கள்.. நயன்தாரா வெளியிட்ட வீடியோ!
சென்னை: நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், வாடகைத்தாய் மூலமாக 2 ஆண் குழந்தைகளை வளர்த்து வருகிறார். உயிர் மற்றும் உலக் என அந்த ட்வின்ஸ் குழந்தைகளுக்கு க்யூட்டான பெயரை வைத்து வளர்த்து வரும் நடிகை நயன்தாரா முதன்முறையாக தனது குழந்தைகள் வானவில்லை பார்த்து ரசிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் என தன்னை யாரும் இனிமேல் அழைக்க வேண்டாம் என சமீபத்தில் அறிக்கை ஒன்றை நயன்தாரா வெளியிட்டு இருந்தார். சுந்தர். சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் நடிகை நயன்தாராவுக்கும் தனக்கும் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றும் தேவையற்ற வதந்திகளை சிலர் கிளப்பி வருகின்றனர். அவர் ரொம்பவே புரொஃபஷனல் சின்சியராக நேரத்துக்கு வந்து நடித்துக் கொடுத்து வருகிறார் என கேங்கர்ஸ் படத்தின் புரமோஷன் பேட்டிகளின் போது நயன்தாராவை பாராட்டி பேசியிருந்தார் சுந்தர். சி.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி நடிப்பில் ரொம்ப காலமாக உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் நிறைவடைந்தது. சீக்கிரமே அந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பத்துடன் சந்தோஷமாக: கடந்த சில ஆண்டுகளாக நயன்தாரா சினிமாவில் அதிக ஆர்வத்தை செலுத்துவதை விட தனது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். அதிலும், எங்கே சென்றாலும் தனது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டே சென்று வருகிறார். ஃபேமிலிக்கு அதிகமான நேரத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஷூட்டிங் இல்லாத போது ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வரும் நிலையில், அவர்கள் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

டெஸ்ட் படமும் பெரிதாக கைகொடுக்கல: நடிகை நயன்தாராவுக்கு கடைசியாக பெரிய ஹிட் படம் என்றால் அது இந்தியில் அவர் அறிமுகமான ஜவான் திரைப்படம் தான். தமிழில் சோலோவாக உமன் சென்ட்ரிக் படங்களை தேர்வு செய்து நயன்தாரா நடித்து வந்தாலும் அவை பெரிதாக ஓடவில்லை. மாதவன் மற்றும் சித்தார்த் உடன் இணைந்து நயன்தாரா நடித்த டெஸ்ட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. ஆனால், இந்த படமும் ரசிகர்களை அதிகம் கவரவில்லை.
மூக்குத்தி அம்மன் 2 மாஸ் காட்டும்: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த நிலையில், தற்போது சுந்தர். சி இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படமும் நயன்தாராவுக்கு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானவில் பார்த்து ரசிக்கும் மகன்கள்: முதன்முறையாக வானவில்லை வானத்தில் பார்த்து ரசித்து "கண்டுபிடிச்சிட்டேன்.. ஐ ரெயின்போ" என உயிர் மற்றும் உலக் சொல்ல அவர்களுடன் அருகே அமர்ந்துக் கொண்டு வானவில்லை பார்த்து எக்ஸ்பிளைன் செய்து வரும் நயன்தாராவின் குரலோடு கூடிய வீடியோ வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. தனது இரு மகன்கள் தான் இனி தன்னுடைய உயிரும் உலகமும் என வாழ்ந்து வரும் நயன்தாராவின் தாய்ப்பாசத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











