நான் என்றைக்குமே லேடி சூப்பர் ஸ்டார் தான்!.. காதலர் தினத்தை முன்னிட்டு நயன்தாரா வெளியிட்ட வீடியோ!
சென்னை: சோசியல் மீடியாவில் இருந்து பல ஆண்டுகளாக ஒதுங்கி இருந்த நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களை தொடங்கினார். அதன் பின்னர், பாலிவுட் நடிகர் ஷாருக் கானுடன் நடித்த ஜவான் படத்தின் புரோமோஷனுக்காக அவர் பதிவிட்ட போஸ்ட்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
தொடர்ந்து தனது புதிய பிசினஸ்களை சோசியல் மீடியா பக்கங்களில் அறிமுகப்படுத்தி வந்த நயன்தாரா தனது இரு மகன்களுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களையும், கணவர் விக்னேஷ் சிவனுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

மிகப்பெரிய பாலிவுட் என்ட்ரி: தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக உள்ள நயன்தாரா கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். கோலிவுட்டில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நயன்தாராவுக்கு கிடைக்காத பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஜவான் படத்தின் மூலம் 1100 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய படத்தில் நடித்த நாயகி என்கிற அந்தஸ்தை அவருக்கு பெற்றுத் தந்தது. சமீபத்தில் நடைபெற்ற Astra Awards விருது விழா நிகழ்ச்சியில் சிறந்த சர்வதேச படத்துக்கான நாமினேஷனில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
பல படங்கள் தோல்வி: கடந்த சில ஆண்டுகளாக நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் பல படங்கள் தோல்வியை தழுவி வருவது அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சிறப்பாக ஓடிய நிலையில் அதன் பின்னர் நயன்தாரா நடிப்பில் வெளியான O2, காட் பாதர், கோல்ட், கனெக்ட், இறைவன் மற்றும் அன்னபூரணி என வரிசையாக பல படங்கள் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பலத்த அடி வாங்கின.
தொழிலில் ஆர்வம்: சினிமாவைத் தாண்டி ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தவர்கள் நயன்தாரா தொடர்ந்து பல பிசினஸ்களை ஆரம்பித்து நடத்தி வருகிறார். ஸ்கின் கேர், சானிடரி நாப்கின் உள்ளிட்ட தொழில்களை சமீபத்தில் தொடங்கிய நயன்தாரா அதில் பெரும் வளர்ச்சியை கண்டு வருவதாகவும் சமீபத்தில் வெற்றி விழா ஒன்றை நடத்தி பேசி இருந்தார்.
காதலர் தினத்தை முன்னிட்டு: பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு தற்போது தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் நடிகை நயன்தாரா வீடியோ ஒன்றை வெளியிட்டு ஹார்ட்டீன் எமோஜியை பதிவிட்டுள்ளார். கூந்தலை எடுத்து பின்னாடி போட்டு கூலர்ஸ் அணிந்துக் கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள நயன்தாராவின் வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும், கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.
அடுத்தடுத்து படங்கள்: மீண்டும் பாலிவுட்டில் நயன்தாரா ஒரு படம் நடிக்க வேண்டும் என இந்தி ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். தமிழில் மாதவன் மற்றும் சித்தார்த் உடன் நயன்தாரா நடித்துள்ள டெஸ்ட் திரைப்படம் சம்மருக்கு வெளியாகிறது. மண்ணாங்கட்டி எனும் படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா. ஜெயிலர் 2வில் இவர் நடிக்கப் போகிறார் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











