நைட் 2.30 மணிக்கு நயன்தாரா மைண்ட் அப்படித்தான் இருக்கும்.. அமைதியா வந்துடுவாங்க.. விக்னேஷ் சிவன் ஓபன்
சென்னை: நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். வாடகை தாய் மூலம் அவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொண்டார்கள். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் கொடுத்த பேட்டிகளில் நயன்தாரா பற்றிய அறியாத பல பக்கங்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்துகொண்டார். அந்தவகையில் அவர் கூறியிருக்கும் இன்னொரு விஷயம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
சிம்புவுடன் ஒரு காதல் தோல்வி, பிரபுதேவாவுடன் ஒரு காதல் தோல்வி என மொத்தம் இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தவர் நயன்தாரா. அந்த சமயங்களில் எல்லாம் அனைவருமே நயனை கேரக்டர் ரீதியாக ரொம்பவே மட்டமாக பேசினார்கள். அவர் அதையெல்லாம் தைரியத்தோடு கடந்து வந்துவிட்டார். சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் நானும் ரௌடிதான் படத்டில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்தார். இந்தக் காதலிலும் அவரை தரக்குறைவாகவே பேசினார்கள்.

நிம்மதியான வாழ்க்கை: இரண்டு பேரும் முதலில் லிவிங்கில் இருந்தார்கள். பிறகு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் செய்த கையோடு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றார்கள். வழக்கம்போல் இந்த விவகாரத்தையும் சிலர் சர்ச்சையாக்க; அதில் எந்த விதிமீறலும் இல்லை என்பது உறுதியானது. தற்போது அவர்கள் குழந்தைகள், குடும்பம் என ரொம்பவே நிம்மதியாகவும், ஜாலியாகவும் வாழ்ந்துவருகிறார்கள். கடந்த வருடத்தில்கூட இரண்டு பேருக்கும் விவாகரத்து நடக்கவிருப்பதாக தகவல்கள் வந்தன. அதனை லேடி சூப்பர் ஸ்டார் திட்டவட்டமாக மறுத்துவிட்டார் என்பது சிறப்புக்குரிய ஒன்று.
இரண்டு பேரின் கரியர்: இரண்டு பேருமே தங்கள் கரியரில் பிஸியாகத்தான் இருக்கிறார்கள். நயன் நடிப்பில் டஜன் கணக்கிலான படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. விக்னேஷ் சிவனை பொறுத்தவரை அஜித் படம் ட்ராப்பானதைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து எல்ஐகே படத்தை இயக்கினார். அப்படம் சமீபத்தில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் படத்தின் கதைக்களம், படத்தில் செய்யப்பட்டிருக்கும் சிஜி வேலைகள் எல்லாம் தரமாக இருந்தன; இன்னும் கொஞ்சம் உழைப்பை போட்டிருந்தால் இந்தப் படம் மெகா ஹிட்டாகக்கூடிய அத்தனை வாய்ப்புகளும் இருந்தன என்பது பெரும்பாலானோரின் கருத்து ஆகும்.
நயன் பற்றி அறியாத பக்கங்கள்: இந்நிலையில் விக்னேஷ் சிவன் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் நயன் பற்றிய அறியாத பக்கங்களை பகிர்ந்துவருகிறார். அப்படி அவர் பேசுகையில், "நாங்கள் ஏதாவது படம் பார்ப்போம். அப்போது மிட் நைட்டில் ஏதோ ஒரு ட்ரைவ் போகலாம் என்று தோன்றும். இல்லையென்றால் ஏதாவது சாப்பிடலாமா என்று தோன்றும். இரவு 2 மணிக்கோ 2.30 மணிக்கோ வா எங்கேயாவது போய் சாப்பிட்டுவிட்டு வரலாம் என்று கூப்பிட்டால் நயனும், ஒன்றும் சொல்லாமல் சரி வா என்று சொல்லி அமைதியாக வந்துவிடுவார். அவரது மைண்ட் செட் மிட் நைட்டில் இப்படித்தான் இருக்கும். பிலால் ஹோட்டலில் இருக்கும் பன் எங்களுக்கு பிடிக்கும். அங்கே போனால் எங்களுக்கு தெரிந்த ஒரு பையன் இருக்கிறான். அவனிடம் மெசேஜ் போட்டால் அவன் காருக்கு கொண்டு வந்து கொடுத்துவிடுவான்" என்றார்.
கோபமானால் டெரர்தான்: முன்னதாக அவர் அதே பேட்டியில், "நயன்தாராவுக்கு கோபம் என்று வந்துவிட்டால் முற்றிலும் டெரர்தான். அவர் முழுக்க முழுக்க வேறு ஒரு ஸோனுக்குள் போய்விடுவார். நான் சமயங்களில் தியாகம் செய்துவிடுவேன். எல்லா மனைவிகளுமே அப்படித்தானே இருப்பார்கள். நான் 350 கோடி ரூபாய் சேர்த்துவிட்டால் செட்டில் ஆகிவிடுவேன்" என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
