மீண்டும் கதை கேட்கிறார் நயன்?

-இதுதான் கோடம்பாக்கத்தில் இன்றைக்கு உலா வரும் ஹாட் தகவல்.
பாஸ் என்கிற பாஸ்கரன்தான் நயன்தாராவின் கடைசிப் படம் என்று பிரபு தேவா தரப்பில் கூறப்பட்டது. அதற்கேற்ப நயன்தாராவும் புதிய படங்களில் ஒப்பந்தமாவதைத் தவிர்த்ததோடு, கதை கேட்கவும் விருப்பமில்லை என்று கூறிவந்தாராம்.
இப்போது அவரது நிலைப்பாட்டில் தடாலடி மாற்றம்.
நல்ல கதை, குடும்பப் பாங்கான வேடமாக இருந்தால் சொல்லுங்கள் என தனது மேனேஜர் மூலம் தகவல் கசியவிட்டுள்ளாராம்.
அப்படியென்றால் திருமணம்...?
இப்போதைக்கு 'கோயிங் ஸ்டெடி' ஸ்டைலில் பிரபுதேவாவுடனான உறவை மெயின்டெய்ன் பண்ணும் மூடிலிருக்கிறாராம். பரபரப்பு அடங்கியதும் கல்யாணம் பண்ணிக்கிட்டா போதும் என்னும் முடிவுக்கு வந்துவிட்டாராம்!
Comments


Click it and Unblock the Notifications