மும்பையில் முகாமிட்ட நயன்தாரா.. ஜோதிகா போல அங்கேயே செட்டில் ஆகிடுவாரா?.. என்ன விசேஷம் தெரியுமா?

சென்னை: தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை கடந்த சில ஆண்டுகளாகவே தங்கள் படங்களில் இருந்து ஒதுக்கி வைத்து வருகின்றனர். கடைசியாக ரஜினிகாந்த் உடன் இணைந்து தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்த நயன்தாரா அதன் பின்னர் விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என எந்தவொரு முன்னணி நடிகருடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைக்காமல் மற்றமொழி படங்களில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து பாலிவுட்டில் நயன்தாரா அறிமுகமான ஜவான் திரைப்படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. இந்நிலையில், அடிக்கடி நயன்தாரா மும்பைக்கு சென்று வருவதாக கூறுகின்றனர்.

Nayanthara heroine Mumbai

மும்பையின் முக்கிய பகுதியான பாந்த்ராவில் இன்று நடிகை நயன்தாரா காட்சியளித்த பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

யஷ் படத்தில்: ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு பிறகு தமிழில் ஒரு சில சிறு பட்ஜெட் படங்களில் நயன்தாரா நடித்துள்ளார். மாதவன் மற்றும் சித்தார்த் உடன் அவர் இணைந்து நடித்த டெஸ்ட் திரைப்படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்ணாங்கட்டி, ராக்காயி உள்ளிட்ட படங்கள் எப்போது வரும் என தெரியவில்லை. கன்னடத்தில் யஷ் நடித்து வரும் டாக்ஸிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.

Nayanthara heroine Mumbai

மும்பையில் நயன்தாரா: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஏனோ சில காரணங்களுக்காக நயன்தாராவை முற்றிலுமாக ஒதுக்கி வரும் நிலையில், திருமணத்துக்குப் பிறகு இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்து வருகிறார் நயன்தாரா. மும்பை, பாந்த்ராவில் இன்று நயன்தாரா செம க்யூட்டான உடையை அணிந்துக் கொண்டு செட்டுக்குள் வந்த காட்சிகளும் ரசிகர்களை பார்த்து கையசைத்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

Nayanthara heroine Mumbai

என்ன விசேஷம்: நடிகை நயன்தாரா அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட பல பிசினஸ் செய்து வருகிறார். அடிக்கடி விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். புதிய விளம்பரம் ஒன்றில் நடிக்கவே அவர் மும்பைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜவான் படத்திற்கு பிறகு பாலிவுட்டில் நயன்தாராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ள நிலையில், மீண்டுமொரு இந்தி படத்தில் அவர் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அடுத்த அட்லீ படம்: அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி, பிகில் மற்றும் ஜவான் உள்ளிட்ட படங்களில் நயன்தாரா ஹீரோயினாக நடித்த நிலையில், அடுத்து அட்லீ இயக்கப் போகும் படத்திலும் லேடி சூப்பர்ஸ்டார் நடித்தால் நல்லா இருக்கும் என்றும் ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

100 கோடி பட்ஜெட்டில்: சுந்தர். சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா நடிக்கப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படத்தை சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப் போவதாகவும் கோலிவுட்டில் பேசிக் கொள்கின்றனர். தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் 2 வெளியானால் நயன்தாராவுக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படமாக அது அமையும் என்கின்றனர். டாக்ஸிக் படம் வெளியானால் கன்னடத்திலும் மார்க்கெட் அதிகரித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X