சும்மாவா லேடி சுப்பர்ஸ்டார்ன்னு சொன்னாங்க...மும்பை ஏர்போர்டில் செம கெத்தாக வந்த நயன்தாரா
மும்பை : மும்பை ஏர்போர்டில் செம கெத்தாக நடந்து வந்த நயன்தாராவின் லேட்டஸ்ட் வீடியோ சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது. இதனால் #Nayanthara என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி உள்ளது.
மலையாளத்தில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையை துவக்கிய நயன்தாரா, பிறகு நடிகையாகி, தமிழில் ஐயா படத்தின் முலம் அறிமுகமானார். படிப்பாக வளர்ந்து லேடி சுப்பர்ஸ்டார் என்ற பெயரையும் பெற்று விட்டார். தென்னிந்திய சினிமாக்களைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
காத்து வாக்குல காதல் படத்தை முடித்த கையோடு, 7 வருடங்களாக காதலித்து வந்த டைரக்டர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். ஜுன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. ரஜினி, விஜய், ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்தினர்.

நயன் - விக்கி ஹனிமுன் போட்டோ
திருமணம் முடிந்ததும் திருப்பதி, கேரளா கோயில்களில் சாமி தரிசனம் செய்தவர்கள், ஹரிமுனிற்கு தாய்லாந்திற்கு சென்றனர். அங்கு ரொமான்டிக்காக நயன்தாரா -விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஒவ்வொரு போட்டோவும் வைரலானது. திருமணத்திற்கு பிறகு இவர்கள் மிக நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகின்றனர்.

மும்பை பறந்த நயன்தாரா
சமீபத்தில் ஹனிமுன் முடிந்து இந்தியா திரும்பிய பிறகும் குட ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சுடாக்கி வருகின்றனர். அதோடு ஷாருக்கானுடன் தான் நடித்து வரும் ஜவான் படத்தின் ஷுட்டிங்கில் பங்கேற்ற மும்பை பறந்தார் நயன்தாரா. அங்கு அவர் ஷுட்டிங்கிற்கு சென்ற வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி டிரெண்டாகின.

கெத்தாக வந்த நயன்தாரா
இந்நிலையில் மும்பையில் இருந்து இன்று சென்னை திரும்புவதற்காக மும்பை ஏர்போர்டில் தனியாக, செம கெத்தாக நடந்து வந்த நயன்தாராவின் வீடியோ படு வைரலாகி வருகிறது. கருப்பு நிற பேண்ட், டி ஷர்ட், கழுத்தில் தாலி, குல் லென்ஸ், ஹைகீல்ஸ், மாஸ்க் அணிந்து நடந்து வந்த நயன்தாராவின் வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

வைரலான நயன்தாரா வீடியோ
லேடி சுப்பர் ஸ்டார்ன்னு சும்மாவா சொன்னாங்க. என்ன கெத்துப்பா என இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் உச்சுக் கொட்டி ரசித்து வருகிறார்கள். நயன்தாரா மட்டுமல்ல இன்று மும்பை ஏர்போர்டில் பாலிவுட் நடிகைகள் பலரும் வந்து போய் உள்ளனர். ஆனாலும் அதிகமானவர்களை கவர்ந்தது நயன்தாராவின் வீடியோவாக தான் உள்ளது.


Click it and Unblock the Notifications











