விக்னேஷ் சிவனை காணோம்.. குழந்தைகளுடன் செம்ம ஸ்டைலாக நயன்.. எங்க இருக்காங்க பாருங்க!

சென்னை: நடிகை, தயாரிப்பாளர் என தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நபராக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் இணைந்து தயாரித்து இவரது கணவர் இயக்கிய படமான லவ் இன்சுரன்ஸ் கொம்பனி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூலை எட்டாமல் படத்தின் புரோமோசன் வேலைகளை படக்குழு விடுவதாக இல்லை. இப்படி இருக்கையில் நயன்தாரா தனது குழந்தைகளுடன் செம்ம ஸ்டைலாக இருக்கும் வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியர் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்படி இருக்கையில் நயன்தாரா மும்பை விமான நிலையத்தில் தனது குழந்தைகளுடன் செம்ம ஸ்டைலாக வெள்ளை நிற சட்டை அணிந்து கொண்டு நடந்து வருகிறார். அவரது உதவியாளர்கள் அவரின் குழந்தைகளை தூக்கி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Nayanthara Spotted in Style with Kids at Mumbai Airport Where is Vignesh Shivan

விக்னேஷ் சிவன்?: வழக்கமாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் என இருவரும் இணைந்து எங்கு சென்றாலும் தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்வார்கள். அப்படி இருக்கும்போது, இம்முறை விக்னேஷ் சிவன் லவ் இன்சுரன்ஸ் கொம்பனி படத்தின் புரோமோசன் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அப்படி இருக்கும்போது நடிகை நயன்தாரா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு மும்பைக்குச் சென்றுள்ளார். அவர் மும்பைக்கு செல்ல முக்கிய காரணம் ஏதாவது படத்துக்கு டப்பிங் அல்லது அடுத்த படத்திற்கு லுக் டெஸ்ட் என ஏதாவது ஒன்றிக்காக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அல்லது ஏதாவது விளம்பர படத்தில் நடிக்க சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

100 நாட்கள்: லவ் இன்சூரன்ஸ் கொம்பனி படத்தின் புரோமோசன்களில் பேசும் போது இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாரா குறித்து தெரிவித்த பல கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதாவது வருடத்தின் 365 நாட்களில் 265 நாட்கள் வேலை பார்க்கலாம். ஆனால் 100 நாட்கள் கட்டாயம் குடும்பத்திற்காக, தங்களுக்காக ஒதுக்கி ஊர் சுற்ற வேண்டும், இணைந்து நேரம் செலவழிக்க வேண்டும் என்ற தங்களுள் வகுத்துக் கொண்ட விதிமுறையை பின் பற்றி வருகிறோம் என்று தெரிவித்தது பலரது கவனத்தை ஈர்த்தது.

லைன் அப்: நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் என்றால் அது டாக்சிக். இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் நடித்துள்ளார். இந்த படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X