Nayanthara: கனடாவிலும் கடை விரித்த நயன்தாரா.. என்ன பிசினஸ்னு பாருங்க.. போட்டோவே சும்மா அள்ளுதே!
சென்னை: நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் சவுதி அரேபியாவில் நடைபெற்ற எஃப் 1 கார் ரேஸ் பந்தயத்தை மகளிர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக கண்டு ரசித்தார். கணவர் மற்றும் குழந்தைகளுடன் அவர் இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் அதிகம் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், டூர் முடித்து திரும்பி விட்டார்களா என தெரியவில்லை. அடுத்து பிசினஸை பார்க்கும் விதமாக புதிய போஸ்ட் ஒன்றை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நயன்தாரா வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்தியாவில் சமீபத்தில் ஏகப்பட்ட தொழில்களை தொடங்கிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அடுத்து கனடாவிலும் தனது தொழிலை ஆரம்பித்து இருப்பதாக அறிவித்துள்ளார்.
அன்னபூரணி சர்ச்சை: இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் அன்னபூரணி திரைப்படம் வெளியானது. தியேட்டரில் படம் வெளியான போது மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அந்த படத்தை பெரிதாக யாரும் கண்டுக் கொள்ளவில்லை. மிகப்பெரிய தோல்வியை அந்த படம் தழுவிய நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி வட இந்தியாவில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. ராமருக்கு எதிராக அன்னபூரணி படம் இருப்பதாகவும் லவ் ஜிகாத்தை பரப்புகிறது என பஞ்சாயத்தை கிளப்பி அந்த படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருந்தே தூக்கி விட்டனர். ஆனால், தி கேரளா ஸ்டோரியை மட்டும் ஓடிடியில் எப்படி அனுமதித்தனர் என்பது தான் ஆச்சர்யம்.
கணவருடன் ஃபாரீன் டூர்: நடிகை நயன்தாரா அடுத்து டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு சவுதி அரேபியாவில் தனது கணவர் மற்றும் இரு மகன்களுடன் ஜாலி டூர் சென்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போதும் போதும் என்கிற அளவுக்கு வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
ஓல்டு ஒயின் நயன்தாரா: தனது மனைவி நயன்தாராவுக்கு வயதாகி விட்டது என்பதை சுட்டிக் காட்டும் விதமாக ஒயின் கிளாஸில் அவரது முகம் தெரியும்படி போட்டோ எடுத்த இயக்குநர் விக்னேஷ் சிவன் உலகத்திலேயே ரெண்டு விஷயம் தான் வயசாக வயசாக ருசியாக இருக்கும் என குறிப்பிட்டு இருந்தார்.
கனடாவில் கடை: இந்தியாவில் அழகுசாதன பொருட்கள் முதல் சானிட்டரி நாப்கின் வரை விற்பனை செய்து வரும் நயன்தாரா இன்று முதல் கனடா நாட்டிலும் தனது புதிய கடையை திறந்து விட்டதாக இன்ஸ்டாகிராமில் சூப்பர் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். சருமத்தை பராமரிக்கும் தனது 9Skin அழகு சாதன பொருளைத்தான் கனடாவில் வாழும் ரசிகர்களும் இன்று முதல் வாங்கிப் பயன்படுத்தலாம் என பதிவிட்டுள்ளார்.
லட்சக் கணக்கில் லைக்ஸ்: நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள ஸ்கின் கேர் பற்றிய போஸ்ட்டுக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர். சுமார் 2.31 லட்சம் லைக்ஸ் குறைந்த நேரத்திலேயே குவிந்து இருக்கிறது. சினிமாவை தாண்டியும் நடிகை நயன்தாரா தனது பிசினஸ் மூலம் உலகளவில் தனது சாம்ராஜ்யத்தை தொடங்கப் போகிறார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











