நயனதாராவை விட்டு விலகாத பிரபு....!

By Sudha

சென்னை: பிரபுதேவாவை விட்டு நயனதாரா விலகி விட்டாலும் கூட அவரது கையிலிருந்து இன்னும் போகாமல் அடம் பிடிக்கிறாராம் பிரபுதேவா... அதாங்க நயனதாரா தனது கையில் குத்தியுள்ள பிரபு என்ற பெயர் கொண்ட பச்சைதான் அது.

எங்கு போனாலும் இந்த பச்சையும் கூடவே ஒட்டிக் கொண்டு வருவதால், நயனதாராவைப் பார்ப்பதை விட இந்த பச்சை குத்திய கையைத்தான் அத்தனை பேரும் கண் கொத்திப் பாம்பாக பார்த்து ரசிக்கிறார்களாம்.

எவ்வளவோ செய்தும் கூட இந்த பச்சையை மட்டும் நீக்க முடியவில்லையாம் நயனதாரா.

சென்னை பட விழாவில் பச்சையுடன்

சென்னை பட விழாவில் பச்சையுடன்

சென்னையில் ஜெயா பாலாஜி ரியல் மீடியா நிறுவனத்தின் புதிய படத் தொடக்க விழாவுக்கு நயனதாரா வந்திருந்தார். நீளமான கை உடைய ஆடையில் அவர் வந்திருந்தாலும் கூட பச்சை அவ்வப்போது எட்டிப் பார்த்தபடியே இருந்தது.

இடது கை இம்சை

இடது கை இம்சை

தனது இடது கையில் பிரபு என்ற பெயரை பச்சைக் குத்தியுள்ளார் நயனதாரா.

காதலில் கசிந்துருகி... கையில் பச்சை குத்தி

காதலில் கசிந்துருகி... கையில் பச்சை குத்தி

அப்போது பிரபுதேவாவுடன் படு நெருக்கமான காதலில் கசிந்துருகிப் போய்க் கிடந்தார் நயனதாரா. அதனால் குத்திய பச்சைதான் இது.

போக மாட்டேங்குறியே பிரபு...

போக மாட்டேங்குறியே பிரபு...

இப்போது பிரபு தேவாவை விட்டு முழுமையாக நீங்கி விட்டார் நயனதாரா. ஆனால் அவரது பெயரைத் தாங்கிய கையைத்தான் மறைக்க முடியாமல் திணறி வருகிறாராம்.

கோபிசந்த் பட விழாவில்

கோபிசந்த் பட விழாவில்

கோபிசந்த்துடன் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை ஏவிஎம் பிள்ளையார் கோவிலில் நடந்தது. அதில் நயனதாரா கலந்து கொண்டார்.

கண் முழுவதும் நயன் கையில்

கண் முழுவதும் நயன் கையில்

அதில் கலந்து கொண்டவர்கள் அத்தனை பேரும் நயனதாராவின் கையில் பளிச்சென தெரிந்த பிரபு என்ற பச்சையையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

மறைக்க முடியாமல் தவித்த நயன்

மறைக்க முடியாமல் தவித்த நயன்

இந்த பச்சை வெளியே தெரியாத வகையில் நீளமான கை கொண்ட உடையில்தான் வந்திருந்தார் நயனதாரா. ஆனாலும் பச்சை அவ்வப்போது பளிச்சிட்டுக் கொண்டிருந்தது.

பிரபுதேவாவின் குருவும் படத்தில்

பிரபுதேவாவின் குருவும் படத்தில்

இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் கிட்டத்தட்ட பிரபுதேவாவுக்கு குரு போல.. காதல் விவகாரங்களில். பிரபுதேவா, நயனதாரா காதலை தீவிரமாக ஆதரித்தவர் பிரகாஷ் ராஜ் என்பதும் நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X