'டோரா' படக்குழுவினரை அதிர வைத்த நயன்தாரா: அப்படி என்ன செய்தார்?
சென்னை: ஒரே நாளில் டப்பிங் பேசி முடித்து டோரா படக்குழுவினரை அதிசயிக்க வைத்துள்ளார் நயன்தாரா.
மாயா படத்தை அடுத்து நயன்தாரா நடித்துள்ள பேய் படம் டோரா. படத்தை தாஸ் ராமசாமி இயக்கியுள்ளார். மாயாவை போன்றே டோராவும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாராவை தேடி பல பேய்க் கதைகள் வந்தபோதிலும் அவர் டோராவை தேர்வு செய்ய காரணம் உள்ளதாம்.

டோரா
டோராவில் நயன்தாரா பேயாக வந்து பழிவாங்கும் விதம் மிகவும் வித்தியாசமாக இருக்குமாம். இந்த காரணத்தால் தான் அவர் டோராவில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

நயன்தாரா
டோரா படத்தில் நயன்தாரா தான் ஹீரோ. படத்தில் தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளார். அடுத்த ஆண்டின் துவக்கத்தில் டோரா ரசிகர்களை மிரட்ட வருகிறாள்.

கார்
டோரா படத்தில் கார் ஒன்றும் முக்கிய பங்கு வகிக்கிறதாம். முதலில் படத்திற்கு டிக் டிக் டிக் என்று பெயர் வைத்திருந்தனர். அதன் பிறகே தலைப்பை டோரா என மாற்றினர்.

நாயகி
நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் சீனியர் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க மறுக்கிறார். டோரா படத்திற்காக நயன்தாரா டப்பிங் பேசியுள்ளார். அதுவும் ஒரே நாளில் டப்பிங் பேசி முடித்து படக்குழுவினரை அதிசயிக்க வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











