சுந்தர் சி போட்ட பிளான்.. நயன்தாராவே இல்லாத மூக்குத்தி அம்மன் 2?.. பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட்!

சென்னை: காதலிக்கும் போது சர்ச்சை திருமணத்திற்கும் பிறகும் சர்ச்சையோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் நம்பர் நடிகை. ஆனால், அரண்மனையை வைத்து மிரட்டியவர் இயக்கத்தில் நடித்து வரும் அந்த நடிகையின் செயலால் படக்குழுவினரே அசந்து போய்விட்டனராம். நம்பவே முடியவில்லை இவரா அப்படி இருப்பது என மூக்கு மேல் கை வைக்கின்றனராம். அதற்கு காரணம் ஒரு நடிகைதான் என கிசுகிசுக்கப்படுகிறது.

கடந்த மாதம் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை பிரம்மாண்டமாக பிரசாத் லேப்பில் தொடங்கியது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் தொடக்க விழாவில் நடிகைகள் மீனா, குஷ்பு, ரெஜினா கசாண்ட்ரா, தொகுப்பாளர் டிடி என அனைவரும் கலந்துகொண்டனர். இப்படத்தின் பூஜை விழாவே பெரிய செட் அமைத்து தொடங்கினர். இதற்கான செலவே 11 கோடியை எட்டியதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் சுந்தர் சி இயக்கும் படங்களில் நடிகைகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பவர். அரண்மணை படம் பார்த்தவர்களுக்கு புரியும்.

nayanthara-suddenly-changed-character-because-of-tamannaah

சர்ச்சை: மூக்குத்தி அம்மன் பூஜை விழாவிலேயே சர்ச்சைகள் தொடங்கின. முன்னணி நடிகையில் ஒருவரான மீனாவை நயன்தாரா அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. படத்தின் விழா மேடையில் மீனா நயன்தாராவை வரவேற்ற போது அவரை கண்டுகொள்ளாமல் சென்றார். இதனால், மீனா மிகவும் அப்செட் ஆனாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. இந்நிலையில் இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையானது. முதல் பிரச்னை தீர்ந்தாலும் அடுத்ததாக இளம் நடிகையை கேரவனில் கூப்பிட்டு திட்டியதாகக் கூறப்படுகிறது. பூஜை விழாவில் நடிகைகளுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை சமூகவலைதளத்தில் ரெஜினா கசாண்ட்ரா பதிவிட்டிருந்தார். இதையறிந்த நயன்தாரா அவரை தனிப்பட்ட முறையில் அழைத்து கண்டித்ததாக செய்திகள் வெளியாகின. இதில் உண்மை இல்லை நட்பு முறையில் படத்தை வெளியிட வேண்டாம், நேரம் கழித்து பதிவிட்டிருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால், நயன்தாரா ரெஜினாவை திட்டியது உண்மைதான் என்றும் கூறப்பட்டது.

கால்ஷீட் பிரச்னை: நாளொரு வண்ணம் சர்ச்சைகளை சந்தித்து வரும் நயன்தாரா, மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு கால்ஷீட் ஒதுக்குவதிலும் பாரபட்சம் காட்டுவதாக செய்திகள் வெளியானது. இதிலும், மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருவதால் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு நேரம் இல்லை என தெரிவித்திருக்கிறாராம். இதை கேட்டு ஷாக் ஆன சுந்தர் சி தயாரிப்பாளரிடம் இதை முறையிட்டுள்ளாராம். இதைத்தொடர்ந்து இந்த பிரச்னை முடிந்து படப்பிடிப்புகள் நடத்தப்பட்டது. ஆனாலும் தொடர் தலைவலி வெடித்ததாக கிசுகிசுக்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இவ்வளவு பிரச்னையோடு படத்தை எடுத்து முடிக்க வேண்டுமா என சுந்தர் சி கடுகடுத்து போனாராம்.

nayanthara-suddenly-changed-character-because-of-tamannaah

படப்பிடிப்பில் பிரச்னை: இதனைத்தொடர்ந்து சமீபத்தில் படப்பிடிப்பின்போது உதவி இயக்குநரை நயன்தாரா கடுமையாக திட்டியதாகக் கூறப்படுகிறது. நம்பர் ஒன் நடிகையாக இருந்துகொண்டு இந்த அலப்பறை கூட இல்லையென்றால் எப்படி என்ற அளவிற்கு நயன்தாராவின் போக்குகள் இருந்துள்ளன. தனது படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குநரை திட்டுவதை சுந்தர் சி ஏற்றுக்கொள்ளமாட்டார் என்ற பேச்சுக்களும் அடிபட்டன. இதன் பின்னர், நயன்தாராவை நீக்கிவிட்டு தமன்னாவை நடிக்க வைப்பதாக பேச்சு அடிபட்டது. சுந்தர் சியை பொறுத்தவரை படப்பிடிப்பு தடை படக்கூடாது. கொடுத்த கால்ஷீட்டில் தயாரிப்பாளர்களுக்கு பிரச்னை வராத அளவிற்கு படத்தை எடுத்து கொடுப்பார் என்ற நற்பெயரையும் பெற்றிருக்கிறார். தனது சொந்த செலவில் இக்கட்டான சூழலில் படங்களை எடுத்து முடித்துள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

குஷ்பூ அறிக்கை: இதுதொடர்பான சர்ச்சை செய்திகள் வெளியான நேரத்தில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்த பேச்சுக்கள் நாளொரு வண்ணம் புதிது புதிதான செய்திகள் வந்து குவிகின்றன. படப்பிடிப்பு தளத்தில் செய்திகளில் குறிப்பிட்டது போல் எதுவும் நடக்கவில்லை. அப்படியொரு சம்பவம் நடக்காதவாறு நல்ல முறையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது படத்திற்கான த்ரிஷ்டி பட்டிருக்கிறது. நிறைய பேரின் கண்கள் இந்த படத்தின் மீது இருக்கிறது என கூறி இப்பிரச்னைக்கு குஷ்பு முற்றுப்புள்ளி வைத்தார்.

nayanthara-suddenly-changed-character-because-of-tamannaah

திடீர் மாற்றம்: இந்நிலையில், மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு தளத்தில் பல நம்ப முடியாத ஆச்சரியங்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது. முன்பு ஆக்ரோசமாக கோபமாக நடந்துகொண்டவர் தானா இவர் என பேசும் அளவிற்கு அவரது செயலில் பல மாற்றங்கள் தெரிகிறதாம். இதைப்பார்த்து படப்பிடி்ப்பு தளத்தில் இருப்பவர்களே கண்ணு வைக்கிறார்களாம். காரணம் என்னவென்று தான் தெரியவில்லையே என்றும் பேச்சு அடிபடுகிறது. நயன்தாராவிற்கான காட்சிகள் முடிந்தாலும் பிறர் நடிப்பதை பார்த்துவிட்டு அவர்களுடன் கொஞ்சம் அரட்டை அடித்து விட்டுதான் கேரவனுக்கே செல்கிறாராம். இதை பார்த்த பலர் வாயடைத்து போனார்களாம். அப்படி என்னதான் நிகழ்ந்திருக்கும், இயக்குநர் என்ன சொல்லியிருப்பார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

nayanthara-suddenly-changed-character-because-of-tamannaah

தமன்னா தான் காரணமா?: நயன்தாராவிற்குள் வந்திருக்கும் இந்த திடீர் மாற்றம் தமன்னாதான் என கிசிகிசுக்கப்படுகிறது. சுந்தர் சியின் குட் புக்கில் இருக்கும் நடிகைகளில் அவரும் ஒருவர். கடந்தாண்டு வெளியான அரண்மனை 4 படம் 100 கோடி வசூலை எட்டியதோடு நல்ல வரவேற்பையும் பெற்றது. இப்படம் எதிர்பார்பபை தாண்டி வெற்றி பெற்றது. கடந்தாண்டு வெளியான முதல் 4 மாதத்தில் 100 கோடி வசூல் செய்த முதல் அரண்மனை 4. பெரிய ஸ்டார் படங்கள் கூட தடுமாறியதாக கூறப்பட்டது. மேலும், அரண்மனை 4 படத்தில் வெளியான அச்சோ அச்சோ அச்சச்சோ பாடலில் தமன்னா கவர்ச்சி நடனத்தால் ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்தில் இவரது கதாப்பாத்திரமும் வரவேற்பை பெற்றது. நயன்தாரா தொடர் பிரச்னை எழுந்ததால் தமன்னா பெயர் அடிபட்டிருக்கிறது.

இதுதான் காரணமாம்: தமன்னாவின் புகழ் ஓங்குவதற்கு முன்பே நாம் அதில் சரி செய்துகொள்ள வேண்டும் என மெனக்கெடலுடன் நயன்தாரா மாறியிருப்பதாகக் கிசுகிசுக்கப்படுகிறது. இயக்குநர் சுந்தர் சி சொன்னதை செய்துவிடுவார் என்ற பயமும் கலந்த மரியாதைதான் நம்பர் ஒன் நடிகையின் மாற்றத்திற்கு காரணமாம். இதனால் தான் அவர் இப்படி செய்திருக்கிறார். ஆனால், மூக்குத்தி அம்மன் படத்தின் வெற்றி நயன்தாரா இல்லாமல் நிகழ்ந்திருக்காது. தமன்னாவை அம்மனாக பார்ப்பதில் சிக்கலும் இருக்கிறது. அந்த கதாப்பாத்திரத்தை தாங்கி நடிக்க கூடியவர் நயன்தாரா. பிரச்னையே அவரே சில இடங்களில் விலை கொடுத்து வாங்குவதாகவும் கிசிகிசுக்கப்படுகிறது. ஆனால், இப்போது அதுபோன்று இல்லை என்பது சற்று மன நிம்மதியை தந்திருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X