இது லேடி சூப்பர்ஸ்டார் ஸ்டைல்.. சிங்கப்பெண்ணுக்கு சர்ப்ரைஸ் பரிசு!
பிகில் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கேப்டனாக நடித்த சிங்கப்பெண் தென்றலுக்கு நடிகை நயன்தாரா சர்ப்ரைஸ் பரிசாக வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சிங்கபெண்களாக களமிறங்கிய அந்த பிகில் அணியின் கேப்டன் தென்றல் எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை அம்ரிதா அய்யர்.
பிகில் தென்றலுக்கு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். நயன்தாராவின் பரிசை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கியுள்ளார் அம்ரிதா அய்யர்.

பிகில் டீம்
விஜய்யின் பிகில் திரைப்படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு 200 கோடி வசூலை தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது. விஜய்யின் பிகில் டீமில் இந்துஜா, ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா, வர்ஷா பொல்லம்மா, அம்ரிதா அய்யர் உள்ளிட்ட நடிகைகளுடன் சில ரியல் பிளேயர்களும் நடித்துள்ளனர். இந்த அணிக்கு கேப்டனாக தென்றல் எனும் கதாபாத்திரத்தில் நடிகை அம்ரிதா அய்யர் அசத்தியிருந்தார்.
ஹீரோயின்
பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அம்ரிதா அய்யர், விஜய் ஆண்டனியின் காளி மற்றும் விஜய் ஏசுதாஸின் படைவீரன் படங்களில் ஹீரோயினாக நடித்தவர். விஜய்யின் தீவிர விசிறியான இவர், அட்லி இயக்கத்தில், விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

பாராட்டு
காளி மற்றும் படைவீரன் படத்தில் நடித்த அம்ரிதா அய்யருக்கு அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், தற்போது விஜய்யின் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில், அவர் நடித்துள்ள தென்றல் என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதால், பலரும் அவரை தென்றல் என்றே பாராட்டி வருகிறார்களாம்.
சர்ப்ரைஸ் பரிசு
சமீபத்தில் பிகில் டீமுடன் அம்ரிதா அய்யர் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். ஆனால், அப்போது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவால் அந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில், அம்ரிதா அய்யரை திடீரென சந்தித்த நயன்தாரா அவருக்கு வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு மற்றும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் போட்டு வைரலாக்கி வருகிறார் நம்ம தென்றல்.


Click it and Unblock the Notifications











