பொன்னியின் செல்வன்: பூங்குழலியாக நயன்தாரா- உங்களுக்கு ஓகேவா?

By Siva

Recommended Video

Ponniyin Selvan Movie: பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா

சென்னை: மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மணிரத்னம். அந்த படத்தில் வந்தியத் தேவனாக கார்த்தியும், குந்தவையாக கீர்த்தியும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடிக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.

Nayanthara to act as Poonguzhali in Ponniyin Selvan

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்குமாறு மணிரத்னம் நயன்தாராவிடம் கேட்டுள்ளாராம். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறாராம். லைகா நிறுவனம் தயாரிக்கிறதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் உருவாகிறது.

பூங்குழலி முக்கியமான கதாபாத்திரம் தான் என்றாலும் நயன்தாராவுக்கு நந்தினி கதாபாத்திரம் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள். மேலும் குந்தவையாக தயவு செய்து கீர்த்தி சுரேஷை போட வேண்டாம் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிலரோ பொன்னியின் செல்வன் நாவலை எல்லாம் படமாக எடுக்கவே கூடாது. அதை அப்படியே விடுவது தான் நல்லது என்கிறார்கள்.

மணிரத்னம் காரணம் இல்லாமல் நடிகர்கள், நடிகைகளை தேர்வு செய்ய மாட்டார். அப்படி இருந்தும் இந்த படத்திற்கான அவரது தேர்வு சரியில்லை என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X