பல வருடங்கள் ஆகிவிட்டன.. நயன்தாரா எடுத்திருக்கும் அதிரடி முடிவு இதுவா?.. ரசிகர்கள் ஆச்சரியம்

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நயன்தாரா கடைசியாக அன்னப்பூரணி, ஜவான் ஆகிய படங்களில் நடித்தார். அந்த இரண்டு படங்களில் ஜவான் மெகா ஹிட்டடித்தது. இப்போது அவர் கைவசம் மண்ணாங்கட்டி, டெஸ்ட், டியர் ஸ்டூடண்ட், டாக்சிக், ராக்காயி உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. சூழல் இப்படி இருக்க பல வருடங்கள் கழித்து அவர் ஒரு முடிவு எடுத்திருப்பதாக திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. 75 படங்களில் இதுவரை நடித்து முடித்திருக்கும் அவர் நானும் ரௌடிதான் படத்தின்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களை நயனும், விக்னேஷும் வாடகை தாய் மூலம் பெற்றுக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விஷயம் பெரும் சர்ச்சையை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

nayanthara vignesh shivan prabhas

தொடர் சர்ச்சைகள்: ஆனால் வாடகை தாய் விஷயத்தில் நயனும், விக்னேஷ் சிவனும் விதியை மீறவில்லை என்பது உறுதியானதால் அந்த சர்ச்சை முடிந்துவிட்டது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவரும் அவர் கடைசியாக தமிழில் அன்னபூரணி படத்தில் நடித்தார். அது அவரது 75ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்தப் படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. சூழல் இப்படி இருக்க சமீப நாட்களாக நயன்தாரா தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவருகிறார்.

தனுஷுடன் மோதல்: அதாவது நயன் பற்றிய ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் ஃபுட்டேஜை பயன்படுத்துவது தொடர்பாக அவருக்கும், தனுஷுக்கும் இடையே மோதல் உருவானது. இந்த விவகாரம் தொடர்பாக தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். முக்கியமாக இந்த விஷயத்தில் நயன் மீதுதான் முழு தவறும் இருக்கிறது; தனுஷ் மீது இல்லை என்பதுதான் திரைத்துறையில் இருக்கும் பெரும்பாலானவர்களின் கருத்து. இது ஒருபக்கம் இருக்க இன்னொரு சர்ச்சையிலும் சிக்கினார் நயன்.

மூன்று குரங்குகள்: சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் வலைப்பேச்சு குழுவினரை மூன்று குரங்குகள் என்று தரக்குறைவாக பேசினார். உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு நடிகை; பத்திரிகையாளர்களை இப்படியா பேசுவது என்று பலரும் தங்களது கண்டனத்தை முன்வைத்துவருகிறார்கள். இதற்கிடையே அவரது கணவர் விக்னேஷ் சிவனோ புதுச்சேரிக்கு சென்று அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசியதாகவும் சில நாட்களுக்கு முன்பு ஒரு சர்ச்சை எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நயன் எடுத்த முடிவு: இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவரும் நயன்தாரா பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி பிரபாஸ் நடிக்கும் ஒரு படத்தில் நயன் ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒத்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடக்கும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.. முன்னதாக ரஜினிகாந்த் நடித்த சிவாஜி, சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் ஆகிய இரண்டு படங்களில் ஒரு பாடலுக்கு அவர் நடனம் ஆடியிருந்தது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X