விக்ரமுடன் இணைகிறார் நயனதாரா?

By Staff


கந்தசாமி படத்துக்குப் பின்னர் விக்ரம் நடிக்கவுள்ள ராஜவேஷம் படத்தில் அவருக்கு ஜோடியாக நயனதாரா நடிப்பார் எனக் கூறப்படுகிறது.


மஜாவுக்குப் பிறகு விக்ரமின் படம் எதுவும் இன்னும் ரிலீஸாகவில்லை. மஜாவுக்குப் பிறகு விக்ரம் நடிக்க ஆரம்பித்த பீமா ஒரு வழியாக முடிந்தது. ஆனால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் நீதிமன்றத் தடை இடையூறாக வந்தது.

இந்த நிலையில் விக்ரம் அடுத்து கந்தசாமி படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜையை பிரமாண்டமாக நடத்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஏற்பாடு செய்துள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து விக்ரம், பூபதி பாண்டியன் இயக்கத்தில் ராஜவேஷம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். பல வெற்றிப் படங்களைக் கொடுத்த மோகன் நடராஜனின் ராஜகாளியம்மன் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.

இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க நயனதாராவை அணுகியுள்ளனர். அவரும் ஓ.கே. சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. பூபதி பாண்டியன் தற்போது விஷால் நடிக்க சத்யம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

சத்யம் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நயனதாராதான் நடிக்கிறார். இதில் ஏற்பட்ட அறிமுகத்தால் தனது ராஜவேஷம் படத்திலும் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என நயனதாராவிடம் பூபதி பாண்டியன் கேட்க, அவரும் ஓ.கே சொல்லியதாக தெரிகிறது.

தற்போது நயனதாரா, அஜீத்துடன் பில்லா, தனுஷுடன் யாரடி நீ மோகினி, விஷாலுடன் சத்யம் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

விஜய்யுடன் குருவி படத்தில் ஜோடி சேரும் வாய்ப்பு வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் திரிஷாவையே படத்தின் நாயகியாக்க விஜய் தீர்மானித்ததால் நயனதாராவை தூக்கி விட்டனர். ஆனால் அதற்காக நயனதாரா பெரிதாக கவலைப்பட்டதாக தெரியவில்லை என்கிறார்கள் கோலிவுட் குருவிகள்.

ஆனா அந்த மடம், ஆகாட்டி சந்தை மடம், இதில் கவலைக்கு ஏது இடம்!

Read more about: nayanthara rajavesham vikram
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X