நயன்தாரா முதல் சமந்தா வரை.. ஹீரோயின்கள் செய்யும் பிளாஸ்டிக் சர்ஜரி.. புட்டு புட்டு வைத்த மருத்துவர்!

சென்னை: உலகளவில் சினிமா பிரபலங்கள் பிளாஸ்டிக் சர்ஜரி அல்லது காஸ்மெடிக் சர்ஜரி என செயற்கையாக தங்கள் அழகை மேம்படுத்த பல முயற்சிகளை செய்து வருகின்றனர். நடிகர்கள் தலைக்கு விக் வைப்பது போல, நடிகைகள் தங்கள் மூக்கு அழகையும், புருவ அழகையும், உதட்டு அழகையும் அதிகம் பராமரித்தும் மேம்படுத்தியும் வருகின்றனர்.

டெர்மடாலஜிஸ்ட் மருத்துவர் ஹமின் அனன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நடிகைகள் என்ன மாதிரியான பிளாஸ்டிக் சர்ஜரிக்களை செய்திருப்பார்கள் என்பதை புட்டு புட்டு வைத்துள்ளார்.

Nayanthara Samantha heroine

சில சமயங்களில் தவறான சிகிச்சைகள் மூலம் நடிகைகளுக்கு பல்வேறு விதமான பின் விளைவுகளும் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நடிகைகள் நயன்தாரா, சமந்தா, தமன்னா, திரிஷா, அதிதி ராவ், ஸ்ருதி ஹாசன், திரிப்தி திம்ரி உள்ளிட்ட பலர் ஆரம்பத்தில் இருந்த தோற்றத்திற்கும் தற்போது உள்ள தோற்றத்திற்கும் மொத்தமாக மாறியிருப்பதற்கு காரணமே காஸ்மெடிக் சர்ஜரி தான் எனக் கூறியுள்ளார்.

நயன்தாரா: நடிகை நயன்தாரா புருவத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஒவ்வொரு படத்துக்கும் புருவத்தில் வித்தியாசம் காட்டி நடித்து வருகிறார். கன்னம் பகுதியிலும், மூக்கு பகுதியையும் அவர் சர்ஜரி செய்துள்ளார் என்றும் லிப் ஃபில்லர்களையும் அவர் பயன்படுத்தியிருப்பார் என்றும் டெர்மடாலஜிஸ்ட் ஹமின் அனன் கூறியுள்ளார்.

Nayanthara Samantha heroine

சமந்தா: நடிகை சமந்தா பானா காத்தாடி படத்தில் அறிமுகம் ஆனபோது இருந்ததை விட தற்போது அவரது அழகு மொத்தமாக மாறிவிட்டது. சூர்யாவுடன் இணைந்து நடித்த 24 படத்திலேயே லிப் ஃபில்லர்ஸ் யூஸ் செய்திருப்பார். உதட்டில் ஊசிப்போட்டு பலூன் போல வீங்க வைத்து ஹைலைட்டாக தெரிய நடிகைகள் இதனை செய்கின்றனர். 24 படத்தில் அவரது மேல் உதட்டை விட கீழ் உதடு பெரிதாக இருக்கும். அது ஒரு மிஸ்டேக் என்றும் அதன் பின்னர் சமந்தா அதனை சரி செய்துக் கொண்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Nayanthara Samantha heroine

ஸ்ருதிஹாசன்: நடிகை ஸ்ருதிஹாசனின் முகம் ஆரம்பத்தில் வட்டமாக இருந்தது. ஆனால், தற்போது தனது முகத்தின் வடிவத்தை ஓவல் ஷேப்புக்கு மாற்றியுள்ளார். அதிகப்படியான பிளாஸ்டிக் சர்ஜரிக்களையும் காஸ்மெடிக் சர்ஜரிக்களையும் ஸ்ருதிஹாசன் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Nayanthara Samantha heroine

திரிஷா: நடிகை திரிஷா மூக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். மேலும், முகமே பொலிவாக தெரிய BOTOX சர்ஜரி பண்ணியிருக்கலாம் என்றார். லிப் ஃபில்லர்ஸ் சிகிச்சை செய்யும் போது 2 நாட்களுக்கு உடற்பயிற்சி செய்யக் கூடாது என்றும் முகத்தை நேராக வைத்துக் கொண்டு தான் தூங்க வேண்டும் என்றும் அதையெல்லாம் சரியாக கடை பிடிக்கவில்லை என்றால் பல விபரீதங்கள் நடக்கவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் மருத்துவர் எச்சரித்துள்ளார்.

Nayanthara Samantha heroine

தமன்னா முதல் திரிப்தி வரை: நடிகை தமன்னா, மெளனி ராய், திரிப்தி திம்ரி, அதிதி ராவ் என பலரும் இதுபோல காஸ்மெடிக் சர்ஜரிக்களை செய்து செயற்கையாக தங்கள் அழகை மெருகேற்றி படத்திற்காக ஷைன் ஆகி வருகின்றனர் என்றும் முறையான சிகிச்சைகளை செய்துக் கொண்டால் பாதிப்பு ஏதும் வராது என்றும் அனிமல் படத்தில் திரிப்தி திம்ரியின் ஒரு புருவம் மேலும், ஒரு புருவம் கீழும் இருக்கும். அது அவர் தவறாக சிகிச்சை செய்ததன் விளைவு தான் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X