மீன் கடை முதல் குழாயடி வரை.. நயன்தாரா, தமன்னா, சமந்தா என்ன பண்றாங்க பாருங்க!.. ஏஐ கலக்கல்
சென்னை: ஏஐ தொழில்நுட்பம்தான் சமீப காலமாக சென்சேஷனல் ஆகியிருக்கிறது. அதை வைத்து நல்லதையும் செய்யலாம் கெட்டதையும் செய்யலாம் என்ற நிலை இருக்கும் சூழலில்; கடந்த சில நாட்களாக கோலிவுட் ஸ்டார்களை வைத்து உருவாக்கப்படும் ஏஐ புகைப்படங்கள் புருவங்களை உயர செய்கின்றன. இந்நிலையில் நடிகைகள் தொர்பான ஏஐ ஃபோட்டோஸும் படு சென்சேஷனல் ஆகியிருக்கின்றன.
தொழில்நுட்பத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறது ஏஐ. புகைப்படங்கள், வீடியோக்கள் உருவாக்குதலில் தொடங்கி எந்த கேள்வியை கேட்டாலும் பதில் சொல்வது வரை என அன்றாட வாழ்க்கையில் அதிகம் கலக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அனைவருமே இப்போது ஏஐயே துணை என்ற நிலைமைக்கு நகர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
சங்கடத்தில் நடிகைகள்: அத்தொழில்நுட்பத்தை வைத்து பல நல்ல விஷயங்களை செய்யலாம். ஆனால் வக்கிர புத்தி படைத்த சிலரோ தவறான செயல்களுக்கு அதை பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக நடிகைகளை ரொம்பவே அவர்கள் டார்கெட் செய்கிறார்கள். ராஷ்மிகா மந்தனா, பிரியங்கா மோகன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோரை வைத்து டீப் ஃபேக் வீடியோக்கள், ஏஐ புகைப்படங்களை தயாரித்து சுத்தலில் விட்டார்கள்.

ராஷ்மிகா மந்தனா கோபம்: இதனால் ரொம்பவே அதிர்ச்சியடந்த ராஷ்மிகா, "டீப் ஃபேக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நான் நடிகையாக இருந்ததால் எனக்கு ஆதரவு கிடைத்தது. ஆனால் சராசரி பெண்களை நினைத்தால் அச்சமாக இருக்கிறது" என்று வேதனையோடு தெரிவித்தார். அதேபோல் ஏஐ மூலம் தனது புகைப்படம் தவறாக சித்தரிக்கப்பட்டதை பற்றி பிரியங்கா மோகன், "இந்தத் தொழில்நுட்பத்தை தவறான வேலைகளுக்கு பயன்படுத்தாமல் நல்ல பணிகளுக்கு பயன்படுத்துங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

கலக்கிய ஏஐ: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு கோலிவுட்டின் டாப் ஸ்டார்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சென்னையின் வீதிகளில் உலாவினால் எப்படி இருக்கும் என்பதை ஹரிஹரன் என்பவர் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கியிருந்தார்.

அது சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்தது. மேலும், இசையமைப்பாளர்கள் அனைவரும் ஒரே டீ கடையில் அமர்ந்து பேசும்படியான ஏஐ புகைப்படங்களும் உருவாக்கப்பட்டன.
இப்போது ஹீரோயின்ஸ்: இந்நிலையில் கதாநாயகிகளை வைத்தும் ஏஐ புகைப்படங்கள் தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, நயன்தாரா, சமந்தா, பூஜா ஹெக்டே, சமந்தா, சினேகா, கீர்த்தி சுரேஷ், அமலா பால், பிரியங்கா மோகன் ஆகியோர் பீச் மணலில் வீடு கட்டுவது போன்றும் கோயிலுக்கு முன்பு ஒன்றாக பூக்கள் வாங்குவது போன்றும், மீன்கள் வாங்குவது, குழாயடியில் மீன்கள் வாங்குவது போன்றும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதை பார்த்த ரசிகர்கள் அட இது உண்மையிலேயே நடந்தால் சூப்பராக இருக்குமே என்று கமெண்ட்ஸ் செய்து சென்சேஷனல் ஆகியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











