முஸ்தபா மோடில் இருக்கும் நயன் திரிஷாவுக்கு இடையில் இருந்த பழைய பஞ்சாயத்து என்ன தெரியுமா?

சென்னை: நடிகைகள் த்ரிஷாவும் - நயன்தாராவும் சந்தித்துக் கொண்டது தொடர்பான புகைப்படங்களை அவர்கள் இருவருமே மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டுள்ளனர். இதில் நயன்தாராவோ முஸ்தபா பாடல் வரிகளை கேப்ஷனாக பதிவிட்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதேபோல் த்ரிஷாவும் நயன்தாரா உடனான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது தொடர்பான பேச்சுக்கள் பரபரப்பாக பேசப்படக் காரணமே, இவர்களுக்கு இடையில் இருந்த பஞ்சாயத்துதான் என்று இணையவாசிகள் பேசி வருகிறார்கள். ஆனால் இருவருக்கும் இடையில் இருந்த பிரச்னை குறித்து கடந்த காலங்களில் இருவருமே பேசி உள்ளார்கள்.

திரிஷா மற்றும் நயன்தாரா என இருவருமே தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் முன்னணி நடிகைகளாகவும் வலம் வந்தவர்கள், இப்போதும் மார்க்கெட்டில் இவர்கள் தான் டாப். இப்படி இருக்கும்போது அவர்களின் கடந்த காலத்தில் அதுவும் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் இருவருக்கும் இடையில் ஒரு பனிப்போர் இருந்ததாக பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டே இருக்கும்.

Nayanthara Trisha Meeting Photos Creates Talks About Their Cold War in Past Details Here

அதுவும் மாஸ் நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அந்த படங்களில் அவர்கள் இருவரும் கதாநாயகிகளாக நடித்திருப்பார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் விழாக்காலங்களில் தமிழிலும் தெலுங்கிலும் என இருவரும் நடித்த படங்களும் வெளியாகி இருவருக்கும் இடையிலான பனிப்போரை அதிகரிக்கச் செய்துள்ளது.

இதுதான் பிரச்னையா?: இருவருக்கும் இடையில் இதுதான் பிரச்னை என்று இருவருமே வாய் திறக்கவில்லை என்றாலும், பேட்டிகளில் இது தொடர்பாக பேசி உள்ளார்கள். ஒருமுறை த்ரிஷா ஒரு பேட்டியில், " நாங்கள் இருவரும் நண்பர்கள் எல்லாம் இல்லை. அதே நேரத்தில் இருவருக்கும் நண்பர்கள் தொடர்பான பிரச்னை ஒன்று இருந்தது. தொழில் ரீதியான பிரச்னைகள் என்று எதுவும் இல்லை என்று தெரிவித்திருந்தார். அதேபோல் நயன்தாரா கூறுகையில் நாங்கள் இருவரும் நண்பர்கள் எல்லாம் இல்லை. இருவருக்கும் நல்ல அறிமுகம் கூட கிடையாது என்று தெரிவித்திருந்தார். அவர்கள் இவ்வாறு பேசி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

Nayanthara Trisha Meeting Photos Creates Talks About Their Cold War in Past Details Here

பேசு பொருள்: இப்படி இருக்கையில் இருவரும் தற்போது சந்தித்துக் கொண்டுள்ளனர். இது பேசு பொருளாக மாறியுள்ளது. இன்னும் சொல்லப்போனால், இருவரும் செம தனியாக சந்தித்து உரையாடி உள்ளனர் என்பதால் அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X