எல்லா நடிகைகளையும்.. நயன்தாராவும், திரிஷாவும் ஆர்யாவை காலி செஞ்சுட்டாங்களே.. புட்டு புட்டு வைத்த ஹீரோயின்ஸ்

சென்னை: நடிகைகள் நயன்தாராவும், திரிஷாவும் கடந்த இரண்டு தசாப்தங்களாக சினிமாவில் டாப் ஹீரோயின்களாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வயது 40க்கு மேல் ஆனாலும் அவர்களது அழகும், இளமையும் குறையவில்லை. திரிஷா நடிப்பில் அடுத்ததாக கருப்பு வருகிறது. நயன்தாரா நடிப்பில் டாக்சிக், ஹாய் உள்ளிட்ட படங்கள் வருகின்றன. இளம் ஹீரோயின்களின் படை சினிமாவில் வந்துவிட்டாலும் இவர்களுக்கான க்ரேஸ் குறையவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் ரஜினி - கமல், அஜித் - விஜய் என நிலவிய போட்டி போல்; திரிஷா - நயன்தாரா போட்டியும் இருந்தது. கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் அவர்கள் இரண்டு பேருமே நடிக்க வந்தார். இரண்டு பேருக்குமே முதல் படம் நல்ல ஹிட்தான். அதேபோல் குறுகிய காலத்திலேயே இளம் ஹீரோக்கள் முதல் சீனியர் ஹீரோக்கள்வரை ஜோடி போட்டு நடிக்க தொடங்கினார்கள். இப்படி அவர்களது வளர்ச்சி ஒரே நேரத்தில் திகழ்ந்ததால்; இரண்டு பேரும் எதிரெதிர் துருவங்களாக நிறுத்தப்பட்டார்கள்.

Nayanthara amp amp Trisha Tease Arya in Viral Video Fans Loving Their Fun Banter
Photo Credit:

சரியான சண்டை: இரண்டு பேருக்கும் போட்டி என்பதை தாண்டி சண்டையும் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுவதுண்டு. முக்கியமாக விஜய்க்கு ஜோடியாக குருவி படத்தில் முதலில் நயன்தான் நடிக்கவிருந்தார் என்றும்; ஆனால் திரிஷா எப்படியோ அந்த வாய்ப்பை பெற்றுவிட்டார் என்றும் கிசுகிசுக்கள் உண்டு. அந்த சமயத்தில் இது மாதிரி எக்கச்சக்க தகவல்கள் வந்துகொண்டே இருக்கும். அவர்களும் அதை ஒத்துக்கொள்ளவும் மாட்டார்கள்; மறுக்கவும் மாட்டார்கள். சில வருடங்கள் முன்புவரைகூட அவர்களுக்குள் போட்டிதான் இருந்தது.

ஒற்றுமையான தோழிகள்: அதேசமயம் இடை இடையே அவர்கள் இரண்டு பேரும் பார்ட்டிகளில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்கள் எல்லாம் வைரலாகும். ஆனாலும் இரண்டு பேரும் முழு மனதோடு ஒற்றுமையாக இல்லை; பொதுவெளிக்காக அப்படி இருக்கிறார்கள் என பேசப்படுவதுண்டு. இப்படிப்பட்ட சூழலில்தான் சில மாதங்களுக்கு முன்பு கடலில் வைத்து திரிஷாவும், நயன்தாராவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தை ஆக்கிரமித்தது. அவர்கள் முஸ்தஃபா முஸ்தஃபா மோடுக்கு மாறிவிட்டதால் இரண்டு பேரின் ரசிகர்களுமே சந்தோஷமாக இருக்கிறார்கள்.

Also Read
இதுக்கு முன் கட்டிப்பிடிச்சதே இல்லையா?.. கவினிடம் ஓபனாக கேட்ட நயன்தாரா.. கூச்சமே போயிடுச்சாம்
இதுக்கு முன் கட்டிப்பிடிச்சதே இல்லையா?.. கவினிடம் ஓபனாக கேட்ட நயன்தாரா.. கூச்சமே போயிடுச்சாம்

அடுத்த படங்கள்: இரண்டு பேருக்கும் இப்போது வயது 40க்கும் மேல் ஆகிறது. ஆனாலும் இப்போதும் அவர்கள் பிஸியாகவே இருக்கிறார்கள். திரிஷா நடிப்பில் கடந்த வருடம் தக் லைஃப், விடாமுயற்சி, குட் பேட் அக்லி வந்தன. அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு படத்தில் நடித்திருக்கிறார். அது மே மாதம் ரிலீஸாகிறது. நயனை பொறுத்தவரை திருமணத்துக்கு பிறகும் அவரது மார்க்கெட் சீராக சென்றுகொண்டிருக்கிறது. டாக்சிக், மண்ணாங்கட்டி, ஹாய், ராக்காயி ஆகிய படங்கள் வருகின்றன. இந்நிலையில் இரண்டு பேரும் சேர்ந்து ஆர்யாவை கலாய்த்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

என்ன வீடியோ?: அதாவது ஒரு பட விழாவில் நயன், திரிஷா, ஆர்யா ஆகிய மூன்று பேரும் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய திரிஷா, 'ஆர்யா என்னிடம் Flirt செய்ததே இல்லை. ஏன் என்று தெரியவில்லை. அவர் எல்லா ஹீரோயின்களையும் நன்றாகவே பார்த்துக்கொள்வார்' என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய நயன்தாரா, 'ஆம் அவருக்கு எல்லா ஹீரோயின்ஸையும் பிடிக்கும். அவர் அத்தனை பேரையும் நன்றாகவும், பத்திரமாகவும் பார்த்துக்கொள்வார்" என்றார். அதை ஆர்யாவும் சிரித்தபடி ஆமோதித்து ஏற்றுக்கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X