மேனி மினுமினுக்க அடிக்கடி ஆயுர்வேத குளியல் போடும் நயன்தாரா
சென்னை: மேனியை மினுமினுப்பாக வைத்துக் கொள்ள மிகுந்த பொருட் செலவில் நயன்தாரா ஆயுர்வேத குளியல் எடுத்து வருகிறாராம்.
இரண்டாவது இன்னிங்ஸில் நயன்தாராவின் கெரியர் சூப்பராக உள்ளது என்று தான் கூற வேண்டும். கடந்த ஆண்டு ராஜா ராணி, ஆரம்பம் ஆகிய 2 வெற்றிப் படங்களில் நடித்தார்.
இந்த ஆண்டும் அவருடைய படங்கள் ரிலீஸாகின்றன.

காதலர் தினம்
காதலர் தினத்தன்று நயன்தாரா உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இது கதிர்வேலன் காதல் படம் ரிலீஸாகிறது. இந்த ஜோடி அடுத்ததாக நண்பேன்டா படத்திலும் சேர்ந்து நடிக்கவிருக்கிறது.

இது நம்ம ஆளு
நயன்தாரா தனது முன்னாள் காதலரான சிம்புவுடன் சேர்ந்து இயக்குனர் பாண்டிராஜின் இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார். முன்னாள் காதலர்கள் ஜோடி சேர்ந்துள்ளதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மவுசு
பல ஆண்டுகளாக நடித்து வருகின்ற போதிலும் நயன்தாராவுக்கு மவுசு மட்டும் குறையவில்லை. அவருடன் சேர்ந்து நடிக்க இளம் நடிகர்கள் ஆசைப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி
நயன்தாரா ஜெயம் ரவி ஜோடியாக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அவர் ஆக்ஷனில் கலக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆயுர்வேத குளியல்
நயன்தாரா தனது மேனியை மினுமினுப்பாக வைத்துக் கொள்ள அடிக்கடி ஆயுர்வேத குளியல் போடுகிறாராம். இதற்காகவே அவர் மாதாமாதம் பெரிய தொகையை செலவு செய்கிறார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











