புத்தாண்டை கொண்டாட அமெரிக்காவுக்கு பறந்த நயன்தாரா, விக்கி: இந்த ஆண்டாவது நடக்குமா?
Recommended Video

சென்னை: நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அமெரிக்காவில் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.
திரையுலக பிரபலங்கள் பலரும் ரசிகர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் அவர்கள் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.
நயன்தாரா
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் லாஸ் வேகாஸில் புத்தாண்டை கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

திருமணம்
2018ம் ஆண்டில் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தது போன்று எதுவும் நடக்கவில்லை. இந்த ஆண்டாவது அவர்களின் திருமணம் நடக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

அமெரிக்கா
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் அமெரிக்காவுக்கு சென்றுவிடுகிறார்கள். அங்கு அவர்கள் ஜோடியாக எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளனர்.

விஸ்வாசம்
நயன்தாரா தனக்கு பிடித்த அஜித்துடன் சேர்ந்து நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. பட போஸ்டர்களிலும், விளம்பர வீடியோவிலும் நயன்தாரா மிகவும் அழகாக உள்ளார். கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் அவருக்கு வெற்றிகரமான ஆண்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











