“என் உயிரோட ஆதாரம் நீ தானடி“.. நயன், விக்கி திருமண நாள் கொண்டாட்டம்.. வெளியான போட்டோஸ்!
சென்னை: தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்தமான காதல் ஜோடியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருக்கிறார்கள். நானும் ரௌடி திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது, இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர். அதன்பின் 6 ஆண்டுகள் இருவரும் காதல் ஜோடியாக வலம் வந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று இவர்கள் மூன்றாம் ஆண்டு திருமண நாளை வெளிநாட்டில் கொண்டாடி உள்ளனர்.
கோலிவுட் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக நயன்தாரா இருக்கிறார். சரத்குமார் படத்தில் அழகான குட்டி பெண்ணான தனது பயணத்தை தொடங்கிய நயன்தாரா. அடுத்தடுத்து தன்னை முன்நிறுத்திக்கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்த இடத்தை இவர் அடைவதற்காக கடந்து வந்த பாதை வலியும், வேதனையும் நிறைந்தது தான். ஆனால், அந்த வலிகளை மறைத்துக்கொண்டு எத்தனை முறை வீழ்ந்தாலும், மீண்டும் வந்து ஆட்டத்தை ஆரம்பித்தார் நயன்.


நடிகை நயன்தாரா: ஒரு கட்டத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கை ஏற்பட்ட பிரச்சனையால் உடைந்து போன நயன்தாரா சில ஆண்டுகள் சில ஆண்டுகள் சினிமாவில் தலைகாட்டவில்லை. அதன் மாயா, நானும் ரௌடிதான், டோரா போன்ற திரைப்படத்தில் நடித்து கம்பேக் கொடுத்தாரை. நானும ரௌடிதான் படத்தில் நடித்த போது, விக்னேஷ் சிவன் எழுதிய, "கண்ணான கண்ணே நீ கலங்காதடி" என்ற பாடலை கேட்ட போது, நயன்தாரா மனதில் விக்னேஷ் சிவன் மீது காதல் வந்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் என்னை பார்ப்பார், என்ன சொல்ல வேண்டுமோ சொல்லிவிட்டு சென்றுவிடுவார், அது எனக்கு தெரியும். "கண்ணான கண்ணே நீ கலங்காதடி" பாடலின் ஒவ்வொரு வரியும் எனக்காக, என்னை நினைத்து எழுதி இருந்தார். அதன் பிறகு தான் எனக்கு அவர் மீது காதல் வந்தது என்று நயன்தாரா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
காதல் திருமணம்: அந்த படத்திற்கு பிறகு இருவரும் பல ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், 2022ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் இந்து முறைப்படி வேதாமந்திரங்கள் ஓத கோலாகலமாக நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஷாருக்கான். ஏஆர்.ரஹ்மான் என பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். அதைத்தொடர்ந்து, வாடகைத்தாய் முறையில் இவர்களுக்கு உலக் மற்றும் உயிர் என்று இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், நயன்தாரான தனது காதல் கணவர் விக்கியுடன் வெளிநாட்டில் மூன்றாவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அந்த போட்டோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர்களும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை இயக்கி முடித்துள்ளார். படம் விரைவில் வெளியாக உள்ளது. அதேபோல, நயன்தாராவும் தனது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்த நிலையில் இப்போது சிறிது ஓய்வில் இருக்கிறார். இருவரும் ஓய்வில் இருக்கும் நிலையில் குடும்பத்தோடு நெதர்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு தான் இருவரும் திருமணநாளை கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











