விக்கியுடன் சேர்ந்து தீபாவளிக்கு பார்ட்டி கொடுத்த நயன்: யார், யார் எல்லாம் வந்தாக தெரியுமா?
Recommended Video

சென்னை: நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு பார்ட்டி கொடுத்துள்ளனர்.
எந்த பண்டிகையாக இருந்தாலும் நயன்தாராவும், அவரின் காதலருமான இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒன்றாக கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் தீபாவளியையும் காதல் ஜோடி சேர்ந்து கொண்டாடியுள்ளது.
தங்களுக்கு நெருக்கமான நண்பர்களுக்கு பார்ட்டியும் கொடுத்துள்ளனர்.
விக்னேஷ் சிவன்
தீபாவளியை முன்னிட்டு நயன்தாரா, விக்கி கொடுத்த பார்ட்டியில் சிவகார்த்திகேயன், இயக்குனர் அட்லி, அவரின் மனைவி ப்ரியா, அனிருத், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நயன்தாரா மஞ்சள் நிற புடவையில் அழகாக இருந்தார்.
அட்லி
நயன்தாரா, விக்னேஷ் சிவன் பார்ட்டியில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் அட்லி.
டிடி
நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடியதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் டிடி.

ரசிகர்கள்
இப்படி சேர்ந்து பண்டிகையை கொண்டாடுவது எல்லாம் சரி. எப்பொழுது திருமணம் என்று நயன்தாரா, விக்னேஷ் சிவனிடம் ரசிகர்கள் கேட்கிறார்கள். அவர்களின் திருமணம் இந்த ஆண்டே நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2018ம் ஆண்டும் நிறைவடையப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











