பொற்கோவிலில் விக்கியுடன் சேர்ந்து தரையில் அமர்ந்து சாப்பிட்ட நயன்: அடுத்து கல்யாண சாப்பாடா?
சென்னை: நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து பொற்கோவிலுக்கு சென்றுள்ளார்.
நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஜெய் சிம்ஹா தெலுங்கு படம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகியவை ஹிட்டாகியுள்ளன.
ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள மகிழ்ச்சியில் உள்ள நயன்தாரா கடவுளுக்கு நன்றி தெரிவிக்க பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றுள்ளார்.
View this post on InstagramA post shared by Vignesh Shivn (@wikkiofficial) on
நயன்தாரா
நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பொற்கோவிலில் தரையில் அமர்ந்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சப்பாத்தி சாப்பிடும் வீடியோ வெளியாகியுள்ளது. பொற்கோவிலில் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
வெள்ளை
முன்னதாக நயன்தாரா கடந்த ஜனவரி மாதம் பொற்கோவிலுக்கு சென்றார். கடவுளுக்கு நன்றி தெரிவிக்க சென்றதாக தெரிவித்தார். அப்போது அவர் கருப்பு நிற உடை அணிந்திருந்தார். இம்முறை வெள்ளை நிற உடை அணிந்து தலையில் முக்காடு போட்டிருந்தார். பொற்கோவில் அருகே விக்னேஷ் சிவனுடன் ஜோடியாக சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்.
சிறந்த நடிகை
சிமா விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கு கிடைத்துள்ளது. அந்த விருதை அவர் சார்பில் நிவின் பாலி பெற்றார். வெற்றி மேல் வெற்றி, விருதுகள் வாங்கிக் குவிக்கிறார் நயன்தாரா. அவருக்கு தனது காதலரை ஹீரோவாக்கி அழகு பார்க்கும் ஆசை ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இயக்குனர்கள் ஹீரோவாக அவதாரம் எடுப்பது புதிது அல்லவே.
கல்யாண சாப்பாடு
நயன்தாரா, விக்னேஷ் சிவன் சாப்பிடும் வீடியோவை பார்த்த ரசிகர்களோ நீங்கள் சாப்பிடுவது இருக்கட்டும், கல்யாண சாப்பாடு எப்பொழுது போடப் போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஜோடியாக செல்ஃபி எடுப்பது, புகைப்படம் எடுப்பதுமாக உள்ளி விக்கி, நயன்தாரா திருமணம் பற்றி மட்டும் வாய் திறப்பது இல்லை. இது தான் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications











