நயன்தாராவுக்கு ஒரு மசாலா கலக்கி பார்சல்.. 30 நிமிடம் காத்திருந்து ஹோட்டலில் சாப்பிட்டுருக்காரே!
சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனுஷுக்கு எதிராக பதிவிட்டதில் இருந்தே அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் ஏகப்பட்ட கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் குவிந்து வருகின்றன. நெட்பிளிக்ஸில் வெளியான நயன்தாரா பியோண்ட் தி ஃபேரி டேல் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்றும் ஃபிளாப் ஆகிவிட்டதாகவும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
நயன்தாரா தனது பிறந்தநாளை இந்த முறை டெல்லி மற்றும் மும்பை என நார்த் இந்தியாவில் கொண்டாடியிருக்கிறார். நேற்று சென்னையில் நடைபெற்ற ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்துக்கு வந்திருந்தார்.

அந்த திருமணத்தில் நடிகர் தனுஷும் கலந்துக் கொண்ட நிலையில், இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் தரமான சம்பவங்களும் அரங்கேறின. நடிகர் சிவகார்த்திகேயன், அனிருத், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர். இந்நிலையில், நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த நவம்பர் 17ம் தேதி டெல்லியில் ஒரு சாதாரண ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விக்னேஷ் சிவன் சாப்பிட வைத்த வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.
சாப்பாட்டு பிரியர்: நடிகை நயன்தாரா சினிமாவில் நடித்து வருவதால் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும், அதற்காக வெறித்தனமாக டயட்டை பின்பற்றுவதோ, வொர்க்கவுட் செய்வது போன்றெல்லாம் செய்ய மாட்டேன் என்றும் தான் ஒரு சரியான சாப்பாட்டு பிரியர் என்றும் லோக்கல் தள்ளு வண்டி கடை முதல் ஹைடெக் ஹோட்டல் வரை சென்று சாப்பிடுவேன் என தனது டாக்குமெண்ட்ரியில் கூறியிருந்தார். இந்நிலையில், அது எந்தளவுக்கு உண்மை என்பதை விக்னேஷ் சிவன் வீடியோ வெளியிட்டு காட்டியுள்ளார்.
நயன்தாரா பர்த்டே பார்ட்டி: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாள் நவம்பர் 18ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், நவம்பர் 17ம் தேதி மாலை டெல்லியில் உள்ள Kake Da ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விக்னேஷ் சிவன் சாப்பாடு வாங்கிக் கொடுத்திருக்கிறார். பரோட்டா, கலக்கி என வெரைட்டி டிஷ்களை நயன்தாரா அடித்து நொறுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
அரை மணி நேரம் லைனில் நின்ற நயன்தாரா: சென்னையில் இது போல சில இடங்களில் மக்கள் நான்வெஜ் சாப்பாட்டை சாப்பிட அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை லைனில் காத்திருந்து சாப்பிட்டு வருகின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவே அரை மணி நேரம் லைனில் காத்திருந்து இந்த ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டுள்ளார் என விக்னேஷ் சிவன் அண்டர்லைன் செய்துள்ளார்.
வீடியோ எடுத்தவருக்கு நன்றி: அந்த ஹோட்டலில் சென்டர் டேபிள் கிடைத்தவுடன் மற்றவர்கள் பற்றியெல்லாம் கண்டுக் கொள்ளாமல் நாங்கள் சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். யாரென்றே தெரியாத நல்ல உள்ளம் இந்த அற்புதமான தருணத்தை வீடியோவாக எடுத்துக் கொடுத்ததற்கு ரொம்பவே நன்றி என விக்னேஷ் சிவன் அந்த வீடியோவை ஷேர் செய்திருக்கிறார்.
ஜவான் படத்திற்கு பிறகும்: நடிகை நயன்தாரா சென்னையில் இப்படியொரு ஹோட்டலில் போய் நிம்மதியாக சாப்பிட முடியுமா என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை. ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்த பின்னரும் டெல்லியில் உள்ள ஒரு பரபரப்பான ஹோட்டலில் இப்படி கூலாக சாப்பிடுகிறாரே என்றும் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடுபவர்கள் கூட அவரை கண்டுக் கொள்ளவில்லையே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











