Nayanthara - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்கும் நயன்தாரா?.. வெளியான சூப்பர் தகவல்
சென்னை: Nayanthara (நயன்தாரா) சில நாள்களுக்கு முன்பு மேடையில் பேசிய நயன்தாராவின் ஆசையை மணிரத்னம் நிறைவேற்றிவிட்டார் என தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழின் முன்னணி நடிகையாக வலம் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவர் தற்போது தனது 75ஆவது படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். அதேபோல் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்திலும் நடித்துவருகிறார் நயன்.

நயன்தாராவின் ஆசை: சில நாள்களுக்கு முன்பு மேடை ஒன்றில் பேசிய நயன்தாரா, சினிமாவில் இருப்பவர்களுக்கு இரண்டே இரண்டு கனவுதான் இருக்கும். ஒன்று மணிரத்னம் போல் ஆகவேண்டும் மற்றொன்று மணிரத்னம் இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் எபதுதான் அது. மணி சார் இயக்கத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது. இரண்டு முறை நானும் அவரும் இணைந்து பணியாற்றுவதாக இருந்தது. ஆனால் அது முடியாமல் போனது" என கூறியிருந்தார்.
மேலும் மணிரத்னம் கைகளால் விருதினை பெற்றுக்கொண்ட அவர், அவருடன் இணைந்து பணியாற்றி அதற்காக விருது வாங்குவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆசை நிறைவேற்றம்: இந்நிலையில் நயன்தாராவின் ஆசையை மணிரத்னம் நிறைவேற்றியிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கமல் ஹாசன் நடிக்கும் 234ஆவது படத்தை மணிரதன்ம்தான் இயக்கவிருக்கிறார். எனவே அந்தப் படத்தில் ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க மணிரத்னம் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நயன் மட்டுமில்லை: மேலும் இந்தப் படத்தில் நயன்தாரா மட்டுமில்லாமல் த்ரிஷாவையும் நடிக்க வைக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. த்ரிஷா ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதில் பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்: நயன் தாரா கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டார். ஆனால் கமல் ஹாசனுடன் மட்டும் இன்னும் நடிக்கவில்லை. ஒருவேளை இந்தப் படத்தில் அவர் நடிக்கும்பட்சத்தில், கமலுடனும், மணிரத்னத்துடனும் அவர் இணைந்து பணியாற்றும் முதல் படமாக அமையும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிப்பது போன்றது இது. எனவே அவரது ஆசையை நிறைவேற்றும் விதமாக இந்தத் தகவல் உண்மையாக வேண்டும் என நயனின் ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்தியன் 2, பொன்னியின் செல்வன் 2: மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் 2 படம் முடிந்துவிட்டது. கமல் ஹாசன் இப்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடைய இருக்கிறது. எனவே இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு மணிரத்னத்துடன் கமல் ஹாசன் இணையும் படத்துக்கான பணிகள் தொடங்கப்படும் என கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











