நயன்தாரா இந்த வருஷம் ஹாட்ரிக் அடிக்கப்போவது உறுதி.. டோலிவுட்டில் செம ஸ்டார்ட்.. அடுத்து 2 லட்டு!

சென்னை: கடந்த ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் ஒரே ஒரு படம் தான் வெளியானது. அதுவும் நேரடியாக ஓடிடியில் தான் வெளியானது. மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உடன் இணைந்து நயன்தாரா நடித்த 'டெஸ்ட்' திரைப்படம் ஓடிடி ரசிகர்களையும் பெரிதும் கவரவில்லை.

கடந்த 2025ம் ஆண்டு நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனுக்கும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. ஆனால், இந்த ஆண்டு இருவருக்கும் மிகப்பெரிய ஆண்டாக அமையப்போவது உறுதி என்றே தெரிகிறது.

Nayanthara will hit hatrick this year her Sankaranti releasse with Chiranjeevi already blockbuster

அதிலும், சங்கராந்திக்கே தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடித்த மன சங்கர வரபிரசாத் காரு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ள நிலையில், இந்த ஆண்டு ஹாட்ரிக் வெற்றியையும் நயன்தாரா ருசி பார்க்கப் போகிறார் என்கின்றனர்.

84 கோடி வசூல்: பாலகிருஷ்ணா நடித்த அகண்டா 2 படத்தை விட அதிரடியாக மிகப்பெரிய வசூல் வேட்டையை சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த மன சங்கர வரபிரசாத் காரு திரைப்படம் ஈட்டியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். முதல் நாளிலேயே அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெளியான இந்த படம் 84 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.

பிரபாஸ் படத்தை விட பிரம்மாதம்: பிரபாஸின் தி ராஜாசாப் திரைப்படம் முதல் நாளில் 102 கோடி ரூபாய் வசூல் என்று சொல்லப்பட்ட நிலையில், 4 நாள் வசூலாக 201 கோடி ரூபாய் வசூலை மட்டுமே ஈட்டியுள்ளது. அந்த படம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு டிசாஸ்டர் ஆகிவிட்டதாக கூறுகின்றனர். ஆனால், அதே சமயம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சிரஞ்சீவி, நயன்தாரா திரைப்படம் சங்கராந்தி வின்னராக மாறியுள்ளாதாக டோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் கணித்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக நயன்தாராவுக்கு பிளாக்பஸ்டர் படம் இல்லாத நிலையில், அவர் செம ஹேப்பியாகி உள்ளாராம்.

Nayanthara will hit hatrick this year her Sankaranti releasse with Chiranjeevi already blockbuster

டாக்ஸிக் வருது: இந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி கேவிஎன் தயாரிப்பில் யஷ் நடிப்பில் நயன்தாரா நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படமும் வெளியாகிறது. கண்டிப்பாக அந்த படம் 1000 கோடி வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு, கன்னட படங்களை தொடர்ந்து தமிழிலும் நயன்தாராவுக்கு பெரிய படம் சம்மருக்கு வெளியாக போகிறது.

மூக்குத்தி அம்மன் 2: வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர். சி இயக்கத்தில் நயன்தாரா, ஊர்வசி, யோகி பாபு, ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறை வெளியீடாக வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டு நயன்தாராவுக்கு ஹாட்ரிக் வெற்றி கன்ஃபார்ம் என்றே தெரிகிறது. மேலும், கவின் உடன் நயன்தாரா நடித்துள்ள ஹாய் படமும் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nayanthara will hit hatrick this year her Sankaranti releasse with Chiranjeevi already blockbuster

விக்னேஷ் சிவன் படம்: வரும் பிப்ரவரி மாதம் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி, கிறிஸ்துமஸ் என கடந்த ஆண்டு ரிலீஸ் தள்ளிப்போன விக்னேஷ் சிவனின் படமும் இந்த ஆண்டு வெளியாகி 100 கோடி வசூல் வேட்டை நடத்தினால், நயன்தாரா செம ஹேப்பி ஆகிவிடுவார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X