எனக்கா சான்ஸ் தரல.. இருங்க பாய்.. 100 கோடி பட்ஜெட்.. விஸ்வரூபம் எடுக்க காத்திருக்கும் நயன்தாரா!

சென்னை: தமிழ் சினிமாவில் திடீரென த்ரிஷாவுக்கு டாப் ஹீரோக்கள் பட வாய்ப்புகளை வழங்கியும் நடிகை நயன்தாராவுக்கு வாய்ப்புகளை மறுக்கவும் ஆரம்பித்தனர். நடிகர் தனுஷ் நடிக்கும் படங்களின் வசூலே 100 கோடி தான் வரும் நிலையில், முதன்முறையாக 100 கோடி பட்ஜெட்டில் நயன்தாரா நடிக்க முக்கிய காரணமே கோலிவுட் நடிகர்களுக்கு எதிராகத்தானா? என்கிற கேள்விகள் தற்போது கோடம்பாக்கத்தில் கிளம்பியுள்ளன.

ஐசரி கணேஷ் ரொம்பவே நம்பிக்கையுடன் சுந்தர். சி காட்டிய மூன்று விரலை அப்படியே பிடித்துக் கொண்டு கொடுக்கிறேன் ஜமாய்ங்க என்று சொல்லிவிட்டார். தென்னிந்திய சினிமாவில் நயன்தாராவை விட சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் அதிக சம்பளம் வாங்கி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படத்தின் மூலம் மீண்டும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா மாறப்போகிறார் என்கின்றனர்.

Nayanthara will soon sit in her Number one throne at Kollywood with Mookuthi Amman 2

சம்பளத்தை தாண்டி படத்தின் லாபத்திலும் அவருக்கு பெரியளவில் ஷேர் கிடைக்கும் என்றும் பேச்சுக்கள் அடிபடத்தொடங்கியுள்ளன. இந்தியளவில் நயன்தாராவின் மார்க்கெட் அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில் தான் அவரை வைத்து பெரிய பட்ஜெட்டில் படமெடுக்க முடிவு செய்திருக்கின்றனர் என்றும் மூக்குத்தி அம்மன் 2 வந்த பின்னர் பல டாப் ஹீரோக்களின் படங்களின் வசூலை எல்லாம் தவிடு பொடியாக்கப் போகிறார் என்கின்றனர்.

100 கோடி பட்ஜெட்: நயன்தாரா நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான உமன் சென்ட்ரிக் படங்களில் அறம் படத்திற்கு பிறகு அனைவரையும் கவர்ந்த படம் என்றால் அது மூக்குத்தி அம்மன் தான். இந்நிலையில் அந்த படத்தில் இரண்டாம் பாகம் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. அரண்மனை 4 படத்தின் இயக்குநர் சுந்தர்சி நயன்தாராவை வைத்து இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தை உருவாக்க உள்ளார்.

Nayanthara will soon sit in her Number one throne at Kollywood with Mookuthi Amman 2

சங்கமித்ரா: சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஸ்ருதிஹாசன் நடிப்பில் சங்கமித்ரா எனும் பிரம்மாண்ட படத்தை உருவாக்கப் போவதாக சுந்தர் சி அறிவித்திருந்தார். ஆர்யா மற்றும் ஜெயம் ரவி என நடிகர்கள் அந்த படத்தில் நடிக்கப் போவதாகவும், ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க போவதாகவும் அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் சில பல காரணங்களுக்காக அந்த படம் அப்படியே டிராப் ஆகிவிட்டது. மூக்குத்தி அம்மன் 2 படத்தில் மகிஷாசுர வதம் நடக்கும் பீரியட் கதை இடம்பெறும் என்றும் அதற்காகத்தான் இத்தனை கோடி பட்ஜெட் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

கழட்டிவிட்ட கோலிவுட்: விஜயுடன் பிகில் படத்தில் நடித்த நயன்தாரா, அதன் பின்னர் ரஜினிகாந்த் உடனிணைந்து தர்பார் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன் பின்னர் அவர் சோலோவாக நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் அதில் நயன்தாரா நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பு தவறி போனது. விஜயின் லியோ படத்தில் நடித்த த்ரிஷாவை அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் புக் செய்துள்ளனர். கிட்டத்தட்ட நயன்தாராவை கோலிவுட் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களை கழட்டி விட்டு விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டன். ஷாருக்கானின் ஜவான் படத்தில் ஹீரோயினாக நடித்த பின்னரும் நயன்தாராவுக்கு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. யஷ் நடிப்பில் உருவாகி வரும் டாப்ஸிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.

இருங்க பாய்: இந்நிலையில், கோலிவுட்டே திரும்பி பார்க்கும் அளவுக்கு 100 கோடி பட்ஜெட் படத்தில் களம் இறங்கி உள்ள நயன்தாரா மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொடுத்துவிட்டு மீண்டும் தனது நம்பர் ஒன் இடத்தை தமிழ்நாட்டில் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகவே லேடிஸ் சூப்பர் ஸ்டார் பட்டத்தையும் அவர் துறந்து இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X