மூக்குத்தி அம்மனா வருவாங்கன்னு பார்த்தா.. காக்கிச்சட்டையில் கலக்கப் போறாராம் நயன்தாரா!

சென்னை: நடிகை நயன்தாரா பல வருடங்களாக பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வந்தாலும் இதுவரை அவர் பெரிதாக காக்கி சட்டை உடையை அணிந்துக் கொண்டு நடித்ததில்லை. இளம் நடிகைகளான பிரியங்கா மோகன், மீனாட்சி சவுத்ரி எல்லாம் காக்கி உடையை அணிந்துக் கொண்டு நடித்து வரும் நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவை காக்கி உடையில் நடிக்க வைக்க சுந்தர். சி முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

40 வயதை கடந்தாலும் இன்னமும் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார் நயன்தாரா. சமீபத்தில் லேடி சூப்பர் பட்டம் எல்லாம் தனக்கு தேவையில்லை என்றும் நயன்தாரா என்று மட்டுமே தன்னை அழைத்தால் போதும் என்று கூறியிருந்தார்.

Nayanthara will stuns her fans with Police Uniform in Mookuthi Amman 2 movie buzz trending

நயன்தாராவுக்கு தமிழில் கடைசியாக தியேட்டரில் வெளியான படம் என்றால் அது ஜெயம் ரவியுடன் அவர் இணைந்து நடித்த இறைவன் படம் தான். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. அதற்கு முன்னதாக வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தான் அவருக்கு ஓரளவுக்கு வெற்றியை கொடுத்த படம்.

தொடர்ந்து ஓடிடியில் வெளியாகும் படங்கள்: பாலிவுட்டில் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்த ஜவான் திரைப்படம் 2023ம் ஆண்டு நயன்தாராவுக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாகவும் பாலிவுட் அறிமுக படமாகவும் அமைந்தது. ஆனால், அதன் பின்னர் அவர் தொடர்ந்து ஓடிடியில் தனது உமன் சென்ட்ரிக் படங்களை வெளியிட்டு வருகிறார். அன்னபூரணி மற்றும் டெஸ்ட் படங்கள் ஓடிடியில் வெளியாகியும் சரியாக ஓடவில்லை.

பெரிய பட்ஜெட்டில் மூக்குத்தி அம்மன் 2: தமிழ் சினிமாவில் 2019ம் ஆண்டு வெளியான பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நயன்தாரா அதன் பின்னர் ரஜினிகாந்த் உடன் இணைந்து தர்பார் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்த 2 படங்களும் படுதோல்வியை சந்தித்த நிலையில், பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து நயன்தாராவுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நயன்தாராவை வைத்து 100 கோடி பட்ஜெட்டில் வேல்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர். சி இயக்கத்தில் உருவாக்கி வருவதாக கூறுகின்றனர். நிகழ்காலம் மற்றும் பீரியட் போர்ஷன் என ஸ்க்ரிப்ட்டை சுந்தர். சி வேறலெவலில் செதுக்கியிருப்பதாக கூறுகின்றனர். அரண்மனை 4 திரைப்படம் தமன்னாவை வைத்து எடுத்து 100 கோடி வசூல் செய்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர். சிக்கு கிடைத்திருக்கிறது.

Nayanthara will stuns her fans with Police Uniform in Mookuthi Amman 2 movie buzz trending

காக்கிச்சட்டையில் நயன்தாரா: பில்லா படத்தில் டூபீஸ் உடையில் தெறிக்கவிட்ட நயன்தாரா ஜவான் படத்தில் போலீஸ் ஆக நடித்தாலும் காக்கிச்சட்டை அணியாமல் தான் நடித்துள்ளார். ஆனால், முதன்முறையாக மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் கதாபாத்திரத்தை தாண்டி போலீஸ் கதாபாத்திரத்திலும் நயன்தாரா நடிக்கப் போகிறார் என்றும் காக்கிச்சட்டை அணிந்து கண்டிப்பாக இந்த படத்தில் அவரை நடிக்க வைக்க சுந்தர். சி பெருமுயற்சிகளை செய்து வருகிறார் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு கம்பீரமான ஒரு தோற்றத்துடன் வந்து நிற்கும் திறமையானவர் தான் நயன்தாரா. அறம் படத்தில் கலெக்டராக வந்து கலக்கியிருப்பார். அடுத்ததாக காக்கிச்சட்டையில் எப்படி வரப்போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X