லேடி சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் மகன்களுக்கு எளிய வாழ்க்கை.. நயன்தாராவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்

சென்னை: நடிகை நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இதுவரை மொத்தம் 75 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் அன்னபூரணி என்ற படத்தில் நடித்திருந்தார். படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் மலையாள படம் ஒன்றிலும் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தனது கணவர் விக்னேஷ் சிவன், தனது மகன்கள் உயிர், உலக் தொடர்பாக பகிர்ந்திருந்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நயன்தாரா அங்கு டிவி தொகுப்பாளராக இருந்து பிறகு ஒரு படத்தில் நடித்தார். பின்னர் தமிழில் ஐயா படம் அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அதுதான் தமிழில் அவருக்கு முதல் படமும்கூட. அழகு மட்டுமின்றி திறமையும் கொண்டிருப்பதால் அவரை தமிழ் திரையுலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. காதல் விவகாரங்களில் சிக்கி பல தனிப்பட்ட தாக்குதல்களை சந்தித்தவர் அவர். ஆனால் அதையெல்லாம் கண்டு அஞ்சாமல் ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

Nayantharas Instagram Video Gone Trending on Social Media

திருமணம்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்த நயன்தாரா கடந்த வருடம் அவரை திருமணம் செய்துகொண்டார். பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களை பெற்றுக்கொண்டனர். உயிர், உலக் என்று மகன்களுக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. திருமணம் செய்து குழந்தை பெற்றாலும் தனது நடிப்பு பயணத்தை தீவிரமாக தொடர்ந்துவருகிறார் நயன்தாரா. அவருக்கு விக்னேஷ் சிவனும் முழு சப்போர்ட் செய்துவருகிறார்.

ஹிந்தியில் என்ட்ரி: இத்தனை வருடங்கள் தமிழ், தெலுங்கில் கலக்கி அவர் தற்போது ஜவான் படத்தின் முலம் ஹிந்தியில் என்ட்ரி ஆகியிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார் இந்தப் படம் வெற்றி பெற்றால் பாலவுட்டிலும் ஒரு பெரிய ரவுண்டு வரலாம் என்று கணக்கு போட்டிருந்தார். அவர் கணக்குபடி ஜவான் படம் பாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அடுத்தப் படம்: இந்த சூழலில் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் கவனம் ஈர்த்ததால் நயனுக்கு அடுத்த ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கவிருக்கும் படத்தில் நயன் நடிக்கிறார் என்றும் அதற்காக 12 கோடி ரூபாய் அவருக்கு சம்பளம் என்று பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. கடைசியாக தமிழில் அவர் அன்னபூரணி படத்தில் நடித்தார். அடுத்ததாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

ட்ரெண்டான வீடியோ: திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும் தனது குழந்தைகள், கணவருடன் அதிக நேரம் செலவிட்டுவருகிறார் நயன். அதுதொடர்பான வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்வார். அந்தவகையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், உயிர், உலக் ஆகியோர் ஜாலியாக ஆட்டோவில் ரைடு சென்றனர். அதனைப் பார்த்த ரசிகர்கள், லேடி சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் தனது மகன்களுக்கு எளிமையான வாழ்க்கையையும் நயன் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டு அந்த வீடியோவை ட்ரெண்டாக்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X