குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா.. ட்ரெண்டாகும் க்யூட் புகைப்படங்கள்

சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். அவர் இதுவரை 75 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது மண்ணாங்கட்டி படத்தை தமிழில் முடித்திருக்கிறார். மேலும் ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். இவை தவிர்த்து ஹிந்தியிலும் அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.

கேரளாவில் பிறந்தவர் மரியம் டயானா. தமிழில் ஐயா படத்தில் நயன்தாரா என்ற பெயரோடு அறிமுகமானார். ஹரி இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. நயனின் அழகும் திறமையும் கோலிவுட்டை கவர்ந்ததை அடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. குறுகிய காலத்திலேயே ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதையடுத்து நயனின் கரியரில் வாய்ப்பு மழை பொழிந்தது.

Nayanthara Vignesh Shivan


முன்னணி நடிகை: அதன்படி விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். குறிப்பாக கிளாமர் ரோல்களை எந்தவித தயக்கமுமின்றி செய்ததன் காரணமாக அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. சூழல் இப்படி இருக்க அவரது வாழ்க்கையில் சில பிரச்னைகள் வந்ததைத் தொடர்ந்து நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். பிறகு ராஜா ராணி, அறம், நானும் ரௌடிதான் என தனது செகண்ட் இன்னிங்ஸை ஃபுல் பார்மோடு தொடங்கினார்.

திருமணம்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்த நயன்; பல வருடங்கள் லிவிங் டூ கெதரில் இருந்துவிட்டு சில வருடங்களுக்கு முன்பு விக்னேஷை திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்த கையோடு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது.

பிஸி நடிகை: திருமணமாகிவிட்டால் நடிப்பதற்கு தயங்கும் நடிகைகளுக்கு மத்தியில் நயன் அதை உடைத்துக் காட்டினார். தொடர்ந்து நடித்துவரும் அவர் ஜவான் படத்தில் நடித்து ஹிந்தியிலும் அறிமுகமானார். அந்தப் படமும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது. தொடர்ந்து தமிழிலும் கவனம் செலுத்திவரும் அவர்; கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்தார். அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடிக்கிறார்.

குழந்தைகளுடன் நயன்: இப்படி பிஸியாக சினிமாவில் சுழன்று வந்தாலும் தனது குடும்பத்திற்கென நேரம் செலவிடுவதில் ரொம்பவே அக்கறையாக இருக்கிறார் நயன். அவ்வப்போது வெளிநாட்டுக்கு குழந்தைகள், கணவர் சகிதமாக டூர் செல்வது; வீட்டில் இருந்து பிள்ளைகளை பார்த்துக்கொள்வது என சிறந்த தாயாகவும் வலம் வருகிறார். அந்தவகையில் அவர் இப்போது தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், தனது இரு குழந்தைகளுடனும் கொஞ்சி விளையாடிக்கொண்டும், தனது தோளில் அவர்களை சாய்த்துக்கொண்டும் இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X