செம ஜாலி மோடில் நயன்தாரா.. குடும்பத்துடன் எங்கே போயிருக்காங்க தெரியுமா?
சென்னை: நயன்தாரா நடிப்பில் கடைசியாக ஓடிடியில் வெளியான டெஸ்ட் திரைப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அந்தப் படத்தால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு 50 கோடி ரூபாய்வரை நஷ்டம் என்று சொல்லப்படுகிறது. சூழல் இப்படி இருக்க நயன் கைவசம் இப்போது ராக்காயி, மண்ணாங்கட்டி, டாக்சிக் உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. மேலும் சிரஞ்சீவியுடன் அவர் தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்த நயன்தாரா; சில வருடங்கள் அவருடன் லிவிங் டூ கெதரில் இருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் முடிந்த கையோடு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றார்கள். அவர்களுக்கு உயிர், உலக் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. திருமணம் முடிந்த பிறகும் படு பிஸியாக நடித்துவருகிறார் நயன்.
ஹிந்தியில் அறிமுகம்: இத்தனை வருடங்கள் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மட்டுமே நடித்துவந்த அவர் ஜவான் படத்தில் நடித்து ஹிந்தியில் அறிமுகமானார். அந்தப் படத்தை அட்லீ இயக்கியிருந்தார். மெகா ப்ளாக் பஸ்டரான அந்தப் படம் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. ஜவான் வெற்றிக்கு பிறகு நயனுக்கு ஹிந்தியிலும் சில ஆஃபர்கள் வந்ததாக கூறப்பட்ட சூழலில்; எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் பிஸி: ஹிந்தியில் அவருக்கு வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை என்றாலும் தமிழில் பிஸியாக இருக்கிறார் அவர். அந்தவகையில் ராக்காயி, மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கும் அவர்; சுந்தர். சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்ததிலிருந்து அவருக்கும் சுந்தருக்கும் வேவ் லெங்த் ஒத்துப்போகவில்லை; எனவே அவர் தூக்கப்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக முணுமுணுப்புகள் கேட்கின்றன. ஆனால் அதுகுறித்து பதிலளிக்க சுந்தர் மறுத்துவிட்டார். இது தவிர்த்து டாக்சிக் படத்திலும் நடித்திருக்கிறார் அவர். அதுமட்டுமின்றி தெலுங்கில் சிரஞ்சீவியுடனும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
நயனை சுற்றிய பிரச்னைகள்: இப்படி படு பிஸியாக நடித்துவரும் அவரை சுற்றி பிரச்னைகளும் அடிக்கடி முளைக்க தொடங்கியிருக்கின்றன. முதலில் ஆவண பட விவகாரத்தில் தனுஷுக்கும் நயனுக்கும் முட்டிக்கொண்டது. இந்த விஷயம் முற்றிப்போனதைத் தொடர்ந்து வழக்காக நீதிமன்றத்தில் இருக்கிறது. அதேபோல் மதுரைக்கு ஒரு விழாவுக்கு தாமதமாக சென்றது; ரஜினிகாந்த் குறித்தும், பத்திரிகையாளர்கள் குறித்தும் ஒரு பேட்டியில் பேசியது என பிரச்னைகளுக்கு மத்தியிலேயே வாழ ஆரம்பித்திருக்கிறார் அவர்.
ஜாலி மோடில் நயன்: ஒருபக்கம் பிரச்னைகள் அவரை சுற்றிக்கொண்டிருந்தாலும் அதை பற்றியெல்லாம் பெரிதாக ரியாக்ட் செய்துகொள்ளாத அவர் தனது வேலை, குடும்பம் என இரண்டையும் கவனிப்பதில் மும்முரமாக இருக்கிறார். அவ்வப்போது தனது கணவர் விக்னேஷ் சிவன், குழந்தைகள் உயிர், உலக் ஆகியோருடன் வெளிநாடுகளுக்கு டூர் செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்தவகையில் அவர் இப்போது தனது குடும்பத்தினருடன் நெதர்லாந்து சென்றிருக்கிறார். அங்கு பல இடங்களை சுற்றீ பார்க்கும் அவர் குழந்தைகளுடன் ஜாலியாக விளையாடும் புகைப்படங்கள், கணவர் விக்னேஷ் சிவனுடன் அவர் கொடுத்த ரொமான்ட்டிக் போஸ் புகைப்படங்கள் உள்ளிட்டவைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தி பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











