Toxic: கியாரா அத்வானி எல்லாம் ஓரம்போங்க.. அக்கான்னு சொன்னாங்க.. பக்காவாக வந்திருக்காரே நயன்தாரா!

சென்னை: பில்லா, ஜவான் என நயன்தாரா செம ஸ்டைலாக பல படங்களில் நடித்து பாக்ஸ் ஆபீஸை தெறிக்கவிட்டுள்ளார். மூக்குத்தி அம்மனாக நேற்று 2ம் பாகத்தின் படப்பிடிப்பை முடித்த நயன்தாராவை கொண்டாடும் விதமாக தற்போது டாக்ஸிக் படத்தில் 'கங்கா' கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள கேரக்டர் போஸ்டரை கேஜிஎஃப் ஹீரோ நடிகர் யஷ் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

யஷ் நடிக்கும் பிரம்மாண்டப் படமான 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் மர்மமான உலகத்தின் மற்றொரு அத்தியாயமாக, நடிகை நயன்தாரா நடித்துள்ள 'கங்கா' கதாபாத்திரத்தின் முதல் தோற்றம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Nayanthara s stunning Ganga Character poster from Toxic movie revealed by Yash now
Photo Credit:

அதிரடி, கவர்ச்சி, ஆற்றல் என அனைத்தையும் உள்ளடக்கிய 'கங்கா'வின் இந்தத் தோற்றம், யஷ்ஷின் கனவுத் திட்டத்தில் நயன்தாரா ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குவதைச் சுட்டுகிறது. தனது தனித்துவமான நடிப்புத் திறமை, உணர்வுபூர்வமான வெளிப்பாடு மற்றும் வலுவான திரை ஆளுமை மூலம் பல ஆண்டுகளாக திரையுலகில் கோலோச்சி வரும் நயன்தாரா, 'டாக்ஸிக்' திரைப்படம் மூலம் ஒரு புதிய பரிமாணத்தில் ரசிகர்களைச் சந்திக்கவுள்ளார். இந்தப் படத்தின் இருண்ட வனப்பில், அவரது இருப்பு ஒரு வலுவான அடையாளமாகவே திகழ்கிறது.

'கங்கா' என்னும் கதாபாத்திரத்தில், துணிச்சலும் கம்பீரமும் கலந்த தோற்றத்தில் நயன்தாரா மிளிர்கிறார். கையில் துப்பாக்கியுடன், செழுமையான கேசினோவின் பின்னணியில் அவர் நிற்பது, அந்தச் சூழலையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிகாரத்தை உணர்த்துகிறது. அழகும் ஆபத்தும் ஒருங்கே அமைந்த இந்தத் தோற்றம், கதாபாத்திரத்தின் ஆழத்தையும், அதன் பின்னணியில் உள்ள மர்மத்தையும் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.

Nayanthara s stunning Ganga Character poster from Toxic movie revealed by Yash now
Photo Credit:

இக் கதாபாத்திரம் குறித்துப் பேசிய இயக்குநர் கீது மோகன்தாஸ், நயன்தாராவின் நடிப்பை வியந்து பாராட்டினார். அவர் குறிப்பிட்டதாவது:

"நயன்தாராவை ஒரு சிறந்த நட்சத்திரமாகவும், வலிமையான முன்னணி ஆளுமையாகவும் எல்லோரும் அறிவோம். ஆனால், 'டாக்ஸிக்' படத்தில், நாம் இதுவரை காணாத ஒரு பரிமாணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெறும் நடித்துக்கொண்டிருக்கவில்லை; அந்தக் கதாபாத்திரமாகவே மாறினார். அவரது ஆழம், நேர்மை, மற்றும் உணர்ச்சிமயமான நடிப்பு அனைத்தும் 'கங்கா'வின் இயல்பாகவே வெளிப்பட்டது. அந்தத் தருணத்தில்தான் எனக்கு உண்மையான 'கங்கா' கிடைத்தார். அதைவிடச் சிறப்பானது, இந்தப் பயணத்தில் நான் ஒரு நெருங்கிய நண்பரையும் பெற்றேன்."

'KGF: Chapter 2' மூலம் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்த யஷ், 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' திரைப்படம் மூலம் மீண்டும் ஒரு புதிய உச்சத்தை அடையத் தயாராகியுள்ளார். தனது தனித்துவமான காட்சியமைப்பு, கருப்பொருள் ஆகியவற்றால் இந்தப் படம் ஏற்கெனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கியாரா அத்வானியின் 'நாடியா' மற்றும் ஹூமா குரேஷியின் மர்மமான 'எலிசபெத்' தோற்றங்கள் வெளியாகி, ரசிகர்களிடையே அப்படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்தன.

யஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதை எழுதியுள்ள இந்தப் படத்தை, கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. பின்னர், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி ஒளிப்பதிவையும், ரவி பஸ்ரூர் இசையமைப்பையும், உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பையும், டி.பி. அபித் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர். அதிரடிச் சண்டைக் காட்சிகளை ஹாலிவுட் புகழ் J.J. பெர்ரி (John Wick) உடன் இந்தியாவின் அனுபவம் வாய்ந்த அன்பறிவ் மற்றும் கெச்சா காம்பக்‌டி இணைந்து வடிவமைத்துள்ளனர்.

வெங்கட் K. நாராயணா மற்றும் யஷ் இணைந்து KVN புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்களின் சார்பில் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். மார்ச் 19, 2026 அன்று, ஈத், உகாதி, குடி பட்வா போன்ற பண்டிகைகளை ஒட்டி, உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

இந்த ஆண்டு அவர் நடிப்பில் டைரக்ட் ஓடிடியாக வெளியான டெஸ்ட் படம் க்ளீன் போல்ட் ஆன நிலையில், அடுத்த ஆண்டு மூக்குத்தி அம்மன் 2, டாக்ஸிக் என நயன்தாரா ஏகப்பட்ட சிக்ஸர்களை விளாச காத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X