நயன்தாராவுக்கு தொடர் தோல்வி.. ஆடியன்ஸ் இல்லாத லைவ்வில் டெஸ்ட் மேட்ச்.. எப்போ எங்கே தெரியுமா?
சென்னை: தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் டெஸ்ட். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் விறுவிறுப்பான அனுபவத்தை தந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். டெஸ்ட் திரைப்படம் நாளை நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. ஆனால், எப்போது வெளியாகும் என்பதை தெரிந்துகொள்வதில் தான் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
தயாரிப்பாளர் சசிகாந்த் முதல் முறையாக டெஸ்ட் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரில் பள்ளி நண்பரான சித்தார்த்திடம் தனது கணவரான மாதவனை அறிமுகம் செய்வது காட்சியுடன் தொடர்கிறது. இதில், விஞ்ஞானியான மாதவனை கேண்டீன் நடத்துவதாக நயன்தாரா தெரிவிக்கிறார். இதில், இந்திய அணியில் எப்படியாவது இடம்பெற வேண்டும் என போராடி கொண்டிருக்கும் சித்தார்த், விஞ்ஞானியாக தனது திறமையை வெளிக்காட்ட மாதவன் ஒரு பக்கம் போராடி கொண்டிருக்கிறார்.

சென்னையில் நடந்த ஒரு வரலாற்று நாளை மையமாக வைத்து டெஸ்ட் படம் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படம் குறித்த புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா ஜாஸ்மின், மாதவன் தங்களது சினிமா அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். பிறகு தனியார் யூடியூப் சேனலில் பேட்டியளித்த மாதவன், நான் எப்போதும் வித்தியாசமான படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால், என்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள் 90களில் அலைபாயுதே, மின்னலே படம் போன்ற சப்ஜெக்டை எடுத்து வருகிறார்கள் என மாதவன் தெரிவித்தார்.
ரசிகர்கள் டேஸ்ட் மாறிவிட்டது: பத்து வருடங்களுக்கு முன்பு நான் சாக்லெட் பாயாக நடிக்க முடியாது. இப்போ ரசிகர்களே நிறைய மாறிவிட்டார்கள். அவர்களது சிந்தனையும் ரொம்ப அட்வான்ஸாக இருக்கிறது. போன வருடம் கமர்ஷியல் படங்களை காட்டிலும் அமரன் படம் தான் நல்ல ஹிட் படமாக இருந்தது. 100 கோடி வசூலையும் தொட்டிருக்கிறது. அதை மாதிரிதான் நானும் வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். என்னை நானே பிரேக் செய்ய போட்டி போடுகிறேன் என மாதவன் கலகலப்பாக தெரிவித்தார்.

டெஸ்ட் ரிலீஸ் எப்போது?: படத்தின் டிரைலர் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், டெஸ்ட் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது. ஆனால், எப்போ எந்த நேரத்தில் என்பது தான் ரசிகர்களின் ஆர்வமாக இருக்கிறது. இந்நிலையில், நாளை மதியம் 12 மணிக்கு ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. டெஸ்ட் படம் தியேட்டரை காட்டிலும் ஓடிடியில் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் என்ற ஆவலுடன் படக்குழுவினர் காத்திருக்கின்றனர். கொரோனாகாலத்தில் ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை போன்ற தமிழ் படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றன. மக்கள் திரையரங்கிற்கு வர முடியாத காரணத்தால் ரிலீஸ் செய்யப்பட்டது.

நயன்தாராதான் காரணமா: டெஸ்ட் படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான விமர்சனத்தை தந்துள்ளனராம். ஆனால், படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு முக்கிய காரணம் நயன்தாராவாம். அவர் நடிப்பில் முன்பு வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை. தோல்வி படங்களாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இப்படத்திற்கும் பெரிய வரவேற்பு கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் இயக்குநர் இந்த முடிவை எடுத்துள்ளாராம். அவர் நடிப்பில் வந்த படங்களுக்கு மார்க்கெட் இருந்தும் தியேட்டரில் வெளியாகாமல் இருப்பது ரசிகர்களுக்கு வருத்தம் தானாம். நயன்தாரா ஒருவருக்காக படத்தை நெட்பிளிக்ஸில் வெளியிடுவது சரியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











