நீயெல்லாம் ஒரு ஆம்பளையா.. அப்பா ஆகணும்னு ஆசை இல்லையா?.. மாதவனை விளாசிய நயன்தாரா.. டெஸ்ட் டிரெய்லர்!

சென்னை: நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக டெஸ்ட் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. அந்தப் படமானது நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இதில் நயனுடன் மீரா ஜாஸ்மின், மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சசிகாந்த் இயக்கியிருக்கிறார். கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கிறது இப்படம். இந்தச் சூழலில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சக்கைப்போடு போட்டது.

மலையாளத்தில் நடிகையாக தனது திரை பயணத்தை ஆரம்பித்த நயன்தாராவை தமிழ் சினிமா ஐயா படத்தின் மூலம் வரவேற்றது. அந்தப் படம் ஓரளவுக்கு நல்ல விமர்சனத்தை பெற்றது. அதனையடுத்து இரண்டாவது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார் நயன். அப்படம் 800 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்தது. இதனால் முதல் இரண்டு படங்களிலேயே நயன்தாரா முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார். சிம்பு, விஜய், அஜித், தனுஷ், சூர்யா உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு நடித்தார்.

நயன் அடைந்த காதல் தோல்விகள்: அவர் பீக்கில் இருக்கும்போது சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்தார். அப்போது இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் திடீரென அந்தக் காதல் பிரேக்கப்பில் முடிந்தது. அந்த சமயத்தில் இரண்டு பேரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தின. அந்தக் காதல் தோல்விக்கு பிறகு சிங்கிளாக இருந்த அவர்; வில்லு படத்தில் நடித்தபோது இயக்குநரும், நடிகரும், நடன அமைப்பாளருமான பிரபுதேவாவை காதலித்தார்.

விக்னேஷ் சிவனுடன் திருமணம்: பிரபுதேவா ஏற்கனவே ரமலத் என்கிற பெண்ணை திருமணம் செய்திருந்தார். ஆனால் நயனுடனான காதலுக்காக ரமலத்தை விவாகரத்து செய்தார். நயனும் பிரபுதேவாவுக்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கு மாறினார். இருப்பினும் அந்தக் காதலும் பிரேக்கப்பில் முடிந்தது. இரண்டு காதல் தோல்விகளுக்கு பிறகு சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நானும் ரௌடிதான் படத்தில் நடிக்கையில் விக்னேஷ் சிவனை காதலித்தார். பிறகு திருமணமும் செய்துகொண்டார்.

Nayanthara s Test Movie Trailer Was Out Now

இரண்டு குழந்தைகள் பெற்ற நயன்தாரா: திருமணம் ஆன கையோடு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்கள் அவர்கள். அதுவும் சர்ச்சையாக்கப்பட்டது. ஆனால் அந்த விவகாரத்தில் விதிமீறல் எதுவும் செய்யப்படவில்லை என்று அரசு விசாரணையில் தெரியவந்தது. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்துவரும் அவர்; சமீபத்தில் சர்ச்சைகளிலும் சிக்க ஆரம்பித்திருக்கிறார். தனுஷுடனான மோதல், பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசியது என அந்த லிஸ்ட் நீள்கிறது.

அடுத்த படங்கள்: அவரது நடிப்பில் கடைசியாக ஹிந்தியில் ஜவான், தமிழில் அன்னபூரணி படங்கள் வந்தன. இரண்டு படங்களில் ஜவான் மெகா ஹிட்டானது. அடுத்ததாக தமிழில் அவரது நடிப்பில் டெஸ்ட், மண்ணாங்கட்டி, ராக்காயி உள்ளிட்ட படங்கள் வருகின்றன. இவற்றில் டெஸ்ட் படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் படத்தில் நயனுடன் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

பட்டையை கிளப்பும் ட்ரெய்லர்:இந்நிலையில் டெஸ்ட் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. ட்ரெய்லரை பார்க்கையில் கிரிக்கெட் மட்ட்டுமின்றி சமூக கருத்தும் படத்தில் முக்கிய இடம் வகிக்கும் என்பது உறுதியாகியிருக்கிறது. மேலும் ட்ரெய்லரில் நயன்தாரா பேசும் வசனம் ஒவ்வொன்றும் பட்டாசாக இருக்கிறது. குறிப்பாக அவர் மாதவனை பார்த்து பேசும் வசனத்தை கண்ட ரசிகர்கள் கண்டிப்பாக படம் முழுக்க தெறிக்கும் வசனங்கள் இடம்பெற்றிருப்பது உறுதியாகியிருப்பதாக கூற ஆரம்பித்திருக்கிறார்கள். டெஸ்ட் படமானது ஏப்ரல் நான்காம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாதவன் கலக்குவாரா?: முன்னதாக தமிழ் சினிமாவின் ஆல் டைம் ஃபேவரைட் சாக்லேட் பாயாக திகழ்பவர் மாதவன். அவர் அலைபாயுதே படத்தில் அறிமுகமாகி ரன், தம்பி என ஏராளமான ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். முக்கியமாக அவர் நடித்த படங்களில் அன்பே சிவம் குறிப்பிடத்தக்க ஒன்று. அதில் கமல் ஹாசன் அளவுக்கு அவர் அவ்வளவு அசால்ட்டாக ஸ்கோர் செய்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தமிழில் மட்டும் கலக்கிவந்த அவர் ஹிந்திக்கு சென்று அங்கும் 3 இடியட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து அங்கும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்டார் என்பது கவனிக்கத்தக்கது. இதன் காரண்மாஅக இந்திய அளவில் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இயக்குநராகவும் ஜொலித்த மாதவன்: ஒருபக்கம் நடிப்பில் பிஸியாக இருந்த அவர் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து ராக்கெட்ரி என்கிற படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை. அதேசமயம் விமர்சன ரீதியாக ஓரளவுக்கு டீசன்ட்டான வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இந்தப் படம் தேசிய விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இன்னொரு படத்தையும் இயக்கும் திட்டத்தில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. நடிகராக எப்படி ஜொலித்தாரோ அதேபோல் இயக்குநராகவும் அவர் ஜொலிக்க வேண்டும் என்பதுதான் அவரின் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

டெஸ்ட்டில் எப்படி?: சூழல் இப்படி இருக்க டெஸ்ட் படத்தில் நயனுடன் முதன்முதலாக மாதவன் இணைந்திருக்கிறார். ட்ரெய்லரை பார்க்கையில் மாதவனின் நடிப்பு பட்டாசாக இருக்கிறது என்றும்; படம் முழுக்க இப்படியாகவே நடித்திருந்தால் கண்டிப்பாக அவர் டெஸ்ட் படத்தில் அனைவரைவிடவும் அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடுவார் என்று ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி தமிழில் மாதவன் தொடர்ந்து கவனத்தை செலுத்த வேண்டும்; இன்றும் அவர் மீது இருக்கும் கிரேஸ் யாருக்குமே குறையவில்லை என்றும் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

மறுபக்கம் சித்தார்த்: இது ஒருபக்கம் இருக்க சித்தார்த்தும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். பாய்ஸ் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான அவர் அடிப்படையில் இயக்குநர் ஆசையில் இருப்பவர். மணிரத்னத்திடம் அவர் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்த அவர் தொடர்ந்து நடிகராகவே பயணப்பட்டுக்கொண்டிருக்கிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் அவர் நடித்திருந்தாலும் அவருக்கு பெரிதாக எந்த வெற்றியும் கிடைக்காமல் இருந்தது.

சித்தா கொடுத்த ஹிட்: இப்படிப்பட்ட சூழலில்தான் அருண்குமார் இயக்கத்தில் சித்தா படத்தில் நடித்தார் சித்தார்த். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்தைத் தொடர்ந்து கமல் ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. முக்கியமாக சித்தார்த்தின் கேரக்டர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் டெஸ்ட் படத்தில் நடித்திருப்பதால் இந்தப் படம் அவருக்கு வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X