திருமணத்துக்குப் பிறகும் நடிப்பு! - நஸ்ரியா முடிவு
திருமணத்துக்குப் பிறகும் நடிப்பதைத் தொடர நஸ்ரியா முடிவு செய்துள்ளார்.
இயக்குநர் பாசில் மகன் பஹத்துடன் திருமண நிச்சயமாகியிருக்கிறது நடிகை நஸ்ரியாவுக்கு. இவர்களது திருமணம் வருகிற ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் கேரளாவில் நடக்கிறது.

திருமணத்துக்குப் பிறகும்...
திருமணத்துக்குப் பிறகு நான் படங்களில் நடிக்க பஹத் தடையாக இருக்கமாட்டார் என்று நடிகை நஸ்ரியா கூறி உள்ளார்.

ஏகப்பட்ட சுதந்திரம்
மேலும் அவர் கூறுகையில், "பகத் எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்துள்ளார். திருமணத்திற்க்கு பிறகு நான் படங்களில் நடிப்பதில் எந்தத் தடையும் இல்லை. இதை முதலிலேயே எனக்கு சொல்லிவிட்டார்.

நான்தான் முடிவு செய்வேன்
எனவே திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதைத் தொடர்வது குறித்து நான்தான் முடிவு செய்வேன். ஆனால் இப்போது அதைபற்றி நான் யோசிக்கவில்லை.

அனைத்துப் படங்களையும்...
நான் ஒப்புக்கொண்ட அனைத்து படங்களிலும் தற்போது நடித்து கொண்டு வருகிறேன். நிச்சயம் அவற்றையெல்லாம் நான் முடித்துவிடுவேன்.

திருமணத்துக்குப் பிறகும் ஷூட்டிங்
திருமணத்துக்குப் பிறகு அந்தப் படங்களின் ஷூட்டிங் தொடர்ந்தாலும் நடித்துக் கொடுப்பேன். அதுவரை புதுப்படங்களை ஒப்புக் கொள்ள மாட்டேன்.

பஹத்துடன்
தற்போது மலையாளத்தில் எல் பார் லவ் என்ற படத்தில் நடித்து வருகிறேன். இதில் என் நிஜ வாழ்க்கை ஹீரோதான் கதாநாயகன்!, என்றார்.


Click it and Unblock the Notifications











