போச்சே, போச்சே விஜய் படம் போச்சே: புலம்பும் நஸ்ரியா

By Siva

சென்னை: விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கை நழுவியதை நினைத்து நஸ்ரியா புலம்புகிறாராம்.

நஸ்ரியா நசீம் கோலிவுட்டில் வந்த வேகத்தில் பிரபலமும் ஆனார், காதல் கிசுகிசுவிலும் சிக்கினார். அவர் ஜெய்யுடன் திருமணம் என்னும் நிக்காஹ் மற்றும் ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில் நடிக்கையில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன.

ஆனால் இதை நஸ்ரியா மறுத்துவிட்டார். தற்போது அவர் தனுஷுடன் நையாண்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் கார்த்தியுடனும் ஜோடி சேர்கிறார்.

முருகதாஸ்

முருகதாஸ்

ராஜா ராணி படத்தை தயாரித்துள்ள ஏ.ஆர். முருகதாஸ் தான் அடுத்ததாக விஜய்யை வைத்து இயக்கும் படத்தில் நடிக்க நஸ்ரியாவை கேட்டிருந்தாராம். அடடா விஜய் படம் கிடைக்கிறதே என்ற சந்தோஷத்தில் இருந்தார் நஸ்ரியா.

கமுக்கமாக முடித்த சமந்தா

கமுக்கமாக முடித்த சமந்தா

விஜய்யை வைத்து முருகதாஸ் படம் இயக்கும் செய்தியை அறிந்த சமந்தா சம்பந்தப்பட்டவர்களை சத்தமில்லாமல் தொடர்பு கொண்டு அந்த படத்தின் ஹீரோயின் வாய்ப்பை பெற்றுவிட்டார்.

பெரிய நடிகை

பெரிய நடிகை

நஸ்ரியா வளர்ந்து வரும் நடிகை. ஆனால் சமந்தா முன்னணி நடிகை. மேலும் தெலுங்கில் அவரது மார்க்கெட் சூப்பராக உள்ளதால் படத்தை ஆந்திரக் கரையோரமும் விற்றுவிடலாம் என்று நினைத்த முருகதாஸ் சமந்தாவை ஒப்பந்தம் செய்துவிட்டாராம்.

போச்சே, போச்சே

போச்சே, போச்சே

விஜய்யுடன் ஜோடி சேரப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த நஸ்ரியாவுக்கு சமந்தா கமுக்கமாக வாய்ப்பை பெற்றது அதிர்ச்சி அளித்துள்ளதாம். இப்படி விஜய் பட வாய்ப்பு கை நழுவிவிட்டதே என்று புலம்புகிறாராம் நஸ்ரியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X