ஆண்ட்ரியாவை காதலித்த பாசில் மகன் பஹத்தை மணக்கிறார் நஸ்ரியா!

By Siva

திருவனந்தபுரம்: நடிகை நஸ்ரியா நஸீமுக்கும், தனது மகனும் நடிகருமான பஹதுக்கும் திருமணம் நடக்கப் போவதாக இயக்குனர் பாசில் தெரிவித்துள்ளார்.

நஸ்ரியாவின் பெயர் படங்கள் தொடர்பாக செய்திகளில் வருவதை விட சர்ச்சை, கிசுகிசுக்களுக்காக அதிகம் வருகிறது. நஸ்ரியா மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானுடன் நடிக்கையில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன.

துல்கர் ஏற்கனவே திருமணம் ஆனவர். இந்நிலையில் நஸ்ரியாவின் திருமணம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.

பஹத்

பஹத்

நஸ்ரியாவும், இயக்குனர் பாசிலின் மகனும் மலையாள நடிகருமான பஹத்தும் சேர்ந்து எல் ஃபார் லவ் படத்தில் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

திருமணம்

திருமணம்

எல் ஃபார் லவ் ஜோடி நிஜ வாழ்க்கையிலும் இணையவிருக்கிறார்கள். நஸ்ரியாவுக்கும், தனது மகன் பஹதுக்கும் திருமணம் என்று பாசில் அறிவித்துள்ளார். மேலும் இது பெற்றோர்கள் பார்த்து நடத்தும் திருமணமே தவிர காதல் திருமணம் இல்லை என்று பாசில் தெரிவித்தார்.

ஆகஸ்ட்

ஆகஸ்ட்

நஸ்ரியா, பஹத் திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் நடக்கும் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா நடிப்பாரா, இல்லையா என்பது தெரியவில்லை.

பஹத்

பஹத்

மலையாளத்தில் வேகமாக வளர்ந்துள்ள நடிகரான பஹத் மணிரத்னம் மகேஷ் பாபுவை வைத்து எடுக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஆன்ட்ரியா

ஆன்ட்ரியா

முன்னதாக நடிகை ஆன்ட்ரியாவை தான் தீவிரமாக காதலிப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் பஹத். ஆனால் ஆன்ட்ரியாவோ தான் யாரையும் காதலிக்கவில்லை என்று தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X